செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கேன்ஸ் பட விழாவில் ' ரன்' விவேக் போல் தவித்த பீஸ்ட் நாயகி..! சூட்கேஸை பறிகொடுத்தார்.!

May 22, 2022 08:34:55 AM

கேண்ஸ் படவிழாவுக்கு சென்ற பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே, விலை உயர்ந்த ஆடைகளுடன் தனது சூகேஸை தவறவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

ரன் படத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னைக்கு வரும் விவேக், பேருந்து நிலையத்தில் தனது சூட்கேஸை பறிகொடுத்துவிட்டு தவிப்பார் அது போன்ற ஒரு இக்கட்டான நிலைக்கு பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே தள்ளப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவில் இருந்து பல்வேறு முன்னணி நாயகர்கள் மற்றும் நாயகிகள் பங்கெற்றனர்.

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையும். பீஸ்ட் படத்தின் நாயகியுமான பூஜா ஹெக்டே முதன்முறையாக இந்த விழாவில் கலந்து கொண்டார்.

பார்வையாளர்களை கவரும் வகையிலான ஆடை மற்றும் நகைகள் அணிந்து பங்கேற்ற பூஜாவுக்கு அடுத்த சில நொடிகளில் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

அவரது அழகு சாதன பொருட்கள், மாற்று உடை மற்றும் விலை உயர்ந்த ஆடைகள் வைக்கப்படிருந்த சூட்கேஸ் ஒன்று மாயமானது . இதனை கண்டுபிடிப்பதற்காக காலை முதல் இரவு வரை தேடிய பூஜாஹெக்டேவின் சிகை அலங்கார நிபுணர் மயங்கி விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

பூஜாஹெடேவும் காலை மதியம் சாப்பிடாமல் இனி பெட்டிக் கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்து நொந்து போனதால் தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொண்டு இரவு தான் சாப்பிட்டதாக தெரிவித்தார்.

கேண்ஸ் திரைப்பட விழாவில் கேமரா முன்பு கெத்தாக போஸ் கொடுத்து விட்டு , சூட்கேஸை பறிகொடுத்ததால் மாற்று உடையின்றி தவித்த நிகழ்வால் பூஜா ஹெக்டேவும், அவருடன் சென்றவர்களும் அன்றைய நாள் முழுக்க பதற்றத்துடனே இருந்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக எடுத்துச்சென்ற தங்க வைர நகைகள் அனைத்தையும் அணிந்து கொண்டதால் அவை தப்பியது என்று பூஜா ஹெக்டே நிம்மதிப் பெருமூச்சி விட்டுள்ளார்.

 


Advertisement
நடிகர் கமல்ஹாசனுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீஸ்
தாம் இயக்கும் 50வது படமே கடைசி என அறிவித்தார் உடி ஆலன்
'சோழர்கள் வருகிறார்கள்'..'பொன்னியின் செல்வன்' படத்தின் சுவரொட்டியின் காட்சிகள் வெளியீடு..!
சாலை விபத்தில் சிக்கிய கே.ஜி.எப் திரைப்பட நடிகர்..!
நடிகர் கமல்ஹாசனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா..!
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் உடல் சென்னை பெசன்ட் நகரில் தகனம்
ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு.!
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்பு..!
பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு
டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான " டாப்கன் மேவ்ரி " இதுவரை 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்து சாதனை.!

Advertisement
Posted Jul 03, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

விவாகரத்தான ஆண்களிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட ஆந்திர பியூட்டி ஆன்ட்டி கைது

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாப்பிள்ளையை புரட்டி எடுத்த மாமியார்... மகளை தாக்கியதால் ஆத்திரம்..! வீதியில் விருந்து வைத்த காட்சிகள்

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அவள் பெயர் கமலா.. 8 கி.மீ சைக்கிள் மிதித்து தாத்தாவுக்கு சாப்பாடு.. வீடு தேடி வந்து ரூ.1 லட்சம் - விருது

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆண்களை கண்டாலே வெறுப்பாக இருக்குது.. மாப்பிள்ளையே வேணாம்.. விபரீத தோழிகளின் வில்லங்க கடிதம்..!

Posted Jul 02, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ஏன்டா காசு காசுன்னு பிச்சி பிடுங்கறீங்க.. ? லஞ்சத்தில் அரசு ஆஸ்பத்திரி..! நிஜத்தில் இந்தியன் தாத்தா வரனும்.!


Advertisement