செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பெற்ற மகள்களை அடித்தே கொன்ற தந்தை.. தீக்குளித்த மற்றொரு மகள்.. குடியால் அரங்கேறிய கொடூரங்கள்..!

May 21, 2022 09:44:07 AM

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், தினசரி குடித்துவிட்டு வந்து வீட்டில் ரகளை செய்த தந்தையால் ஒரு மகள் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இரண்டு மகள்களை அந்த கொடூரத் தந்தை அடித்தே கொன்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த சின்ன மதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் - கீதா தம்பதிக்கு ஒரு மகன், 3 மகள்கள் என 4 பிள்ளைகள் இருந்தனர். வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்த கோவிந்தராஜ், கூலி வேலைக்குச் செல்லும் மனைவியிடம் இருந்து பணத்தை மிரட்டி வாங்கி தினசரி குடித்துவிட்டு வந்து, அவரையும் பிள்ளைகளையும் அடித்துத் துன்புறுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை கோவிந்தராஜ் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்தபோது கீதா வெளியே சென்றிருந்த நிலையில், 16 வயது மூத்த மகள் நந்தினியும் 10 வயதான கடைசி மகள் தீபாவும் வீட்டில் இருந்துள்ளனர். போதையின் உச்சத்தில் வந்த கோவிந்தராஜ், அம்மா எங்கே என மகள்கள் இருவரிடமும் கேட்டுள்ளான்.

"ஏன் இப்படி தினசரி குடித்துவிட்டு வந்து அம்மாவை தொல்லை செய்கிறாய்" ? என அவர்கள் இருவரும் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், கையில் கிடைத்த கம்பி, கட்டை ஆகியவற்றை எடுத்து மகள்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளான்.

முகம், கை, கால், தலைப் பகுதி என கண்மூடித்தனமாகத் தாக்கியதில் சிறுமிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுமிகளின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், கோவிந்தராஜை சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

போலீசார் விசாரணையில் கோவிந்தராஜுவின் மற்றொரு பெண் குழந்தை அவனது கொடுமை தாங்காமல் கடந்த மாதம் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பெற்ற தந்தையின் குடிப்பழக்கத்தால் 3 பிஞ்சுகள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் பலியான சம்பவம் ஒரகடம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 


Advertisement
கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து.. வங்கி சுவரை இடித்து தள்ளி விபத்து.. சிசிடிவி காட்சிகள்..
கடந்த 6 மாதமாக உயிருக்காக போராடிய மீனாவின் கணவர்...! இறப்பின் பின்னணி இது தான்
கால் டாக்ஸி ஓட்டுனர் கழுத்தை அறுத்து கொடூரக் கொலை.. 2 மாத குழந்தையுடன் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள அவரது மனைவி.!
அவ்வப்போது ஓ.பி.எஸ் நிலைப்பாட்டை மாற்றுகிறார் - இ.பி.எஸ்
இறுதி ஊர்வலத்தில் இரு தரப்பினருக்கிடையே மோதல்.. கார் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு!
ராஜஸ்தானில் தையல்கடைக்காரர் தலையை வெட்டிய 2 பேர் கைது
சென்னை புளியந்தோப்பில் ரவுடியை வெட்டிக் கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பல்... போலீஸ் வலைவீச்சு!
பாம்புகளால் அவதிப்படும் பாலசோர் மக்களுக்கு உதவும் பாம்பு பிடிக்கும் நபர்..!
எலிக்கு பயந்து பூனையிடம் சரண் அடைந்த போலீஸ்..! வேற வழி தெரியல ஆத்தா..!
அறுக்கப்பட்ட கழுத்துடன்…… வாடகைக் கார் ஓட்டுனர்களே.. இரவில் வாடகையா உஷார் ..!

Advertisement
Posted Jun 29, 2022 in இந்தியா,Big Stories,

புது நன்மைக்காக நீராடிய இளைஞர் மீது பாய்ந்தது மின்சாரம்..! ஆசி வழங்கிய பாதிரியார் அதிர்ச்சி..!

Posted Jun 29, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கடந்த 6 மாதமாக உயிருக்காக போராடிய மீனாவின் கணவர்...! இறப்பின் பின்னணி இது தான்

Posted Jun 29, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

எலிக்கு பயந்து பூனையிடம் சரண் அடைந்த போலீஸ்..! வேற வழி தெரியல ஆத்தா..!

Posted Jun 29, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

அறுக்கப்பட்ட கழுத்துடன்…… வாடகைக் கார் ஓட்டுனர்களே.. இரவில் வாடகையா உஷார் ..!

Posted Jun 29, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா மிஸ்டர் காண்ட்ராக்டர்ஸ்..? இப்படியா காங்கிரீட் ரோடு போடுரது..?


Advertisement