வாட்ஸ் அப் குழுவில் இருந்து சத்தமில்லாமல் வெளியேறும் வகையில் புதிய வசதி அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகளவில் ஏராளமான பயனாளர்களை கொண்ட வாட்ஸ் அப், அவ்வப்போது பயன்பாட்டு வசதிக்காக அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், எந்தவித அறிவிப்புமின்றி வாட்ஸ் அப் குழுவில் இருந்து வெளியேறும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக குழுவில் இருந்து வெளியேறும்போது, அதில் வெளியேறிய நபர் குறித்த தகவல் இடம்பெறும்.
ஆனால், இனி வரும் நாட்களில், குழுவில் இருந்து வெளியேறினால் அதன் 'அட்மின்' மட்டும் தெரிந்து கொள்ளும்படி புதிய வசதி வரவுள்ளது.