மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அகில இந்திய செஸ் பெடரேஷன் வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை இல்லாத அளவாக 20 பேர் கொண்ட அணி பங்கேற்க உள்ளதாகவும், அணியின் வழிகாட்டியாக விஸ்வநாதன் ஆனந்த் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மகாபலிபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனிடையே, இந்திய வீரர்களுக்கு வருகிற 8ஆம் தேதி முதல் மகாபலிபுரத்தில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.