செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மைனஸ் 2 டிகிரி குளிர்.... 10 பேருக்கு ஒரு பாக்கெட் பிஸ்கட்... தாயகம் திரும்பிய மாணவர்கள் ..! குண்டு சப்தங்களுக்கு இடையே மீட்பு

Mar 08, 2022 07:58:23 AM

உக்ரைன் போர்ச்சூழலில் இருந்து பெரும் போராட்டத்துக்கிடைய வீடு திரும்பிய மருத்துவ மாணவர்களை அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர். 

கொடைக்கானல் பாக்கியபுரம் பகுதியை சேர்ந்த சகாயம் என்பவரின் மகள் வியானி உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள மருத்துவ கல்லூரில் ஐந்தாம் ஆண்டு பயின்று வந்தார். போர்ச்சூழலில் ஒரு வார காலம் தவித்த நிலையில், மத்திய அரசின் உதவியால் மீண்டு வந்த மாணவி பெற்றோரைப் பார்த்ததும் உற்சாகத்துடன் கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த இந்துஜா, உக்ரைனின் மேற்குப் பகுதியில் சிக்கியிருந்தவர். எந்நேரமும் கேட்கும் குண்டு சப்தங்களுக்கிடையே அச்சத்துடன் இருந்ததாகவும் தங்களை விட கிழக்குப் பகுதியில் இருந்தவர்களின் நிலைதான் மோசம் என்றும் கூறினார். முன்னதாக மாணவியைப் பார்த்ததும் அவரது தாய், தந்தையர், உறவினர் மகிழ்ச்சிப் பெருக்கில் கட்டியணைத்து வரவேற்றனர்.

 உக்ரைனில் இருந்து போலந்து எல்லை வரை வந்து மைனஸ் 2 டிகிரி குளிரில் சிக்கி ஒருநாள் முழுக்க நின்றிருந்ததாகக் கூறும் மயிலாடுதுறை மாவட்டம் கோவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மாணவி ஆர்த்திகா, வீடு வந்து சேர்ந்தது பெரும் ஆறுதல் அளிப்பதாகத் தெரிவித்தார். இந்தியா வந்து சேரும் வரை மத்திய அரசும் டெல்லி வந்தடைந்ததும் தமிழக அரசும் தங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தனர் என்றும் அவர் கூறினார். மகள் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தது குறித்து அவரது பெற்றோரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் இருந்து பத்திரமாக ஊர் திரும்பியுள்ளனர். பதுங்குக் குழிகளில் சிக்கியிருந்தபோது உணவு கிடைக்காமல் தவித்ததாகவும், கிடைத்த ஒரு பாக்கெட் பிஸ்கட்டை ஒருவருக்கொருவர் பகிர்ந்து உண்டதாக தெரிவித்தனர். பாதுகாப்பாக ஊர் திரும்பிய தங்களது பிள்ளைகளுக்கு இனிப்புகள் வழங்கி பெற்றோர் வரவேற்றனர்.


Advertisement
காணாமல் போன மளிகை வியாபாரி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!
தலையில்லா சடலத்தை எடுத்துச்சென்று நடனம் ஆடி அடக்கம் செய்த உறவினர்கள்..!
எங்க வீட்டு பெண் மீதா கைவக்கிற..? மாணவியிடம் அத்துமீறியவரை சம்ஹாரம் செய்த குடும்பம்..!
மூக்குத்தியை கூட விடல.. இதை வெளிய சொன்னா ரத்தம் கக்கி செத்துரூவீங்க..! சொல்வதெல்லாம் பொய்யான சோகம்.!
புது நன்மைக்காக நீராடிய இளைஞர் மீது பாய்ந்தது மின்சாரம்..! ஆசி வழங்கிய பாதிரியார் அதிர்ச்சி..!
கடந்த 6 மாதமாக உயிருக்காக போராடிய மீனாவின் கணவர்...! இறப்பின் பின்னணி இது தான்
எலிக்கு பயந்து பூனையிடம் சரண் அடைந்த போலீஸ்..! வேற வழி தெரியல ஆத்தா..!
அறுக்கப்பட்ட கழுத்துடன்…… வாடகைக் கார் ஓட்டுனர்களே.. இரவில் வாடகையா உஷார் ..!
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா மிஸ்டர் காண்ட்ராக்டர்ஸ்..? இப்படியா காங்கிரீட் ரோடு போடுரது..?
உயிர் காப்பதில் தந்தையை போல் தைரியம் யாருக்குமில்லை..!

Advertisement
Posted Jul 01, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காணாமல் போன மளிகை வியாபாரி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!

Posted Jul 01, 2022 in தமிழ்நாடு,வீடியோ,சென்னை,Big Stories,

தலையில்லா சடலத்தை எடுத்துச்சென்று நடனம் ஆடி அடக்கம் செய்த உறவினர்கள்..!

Posted Jul 01, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எங்க வீட்டு பெண் மீதா கைவக்கிற..? மாணவியிடம் அத்துமீறியவரை சம்ஹாரம் செய்த குடும்பம்..!

Posted Jun 30, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மூக்குத்தியை கூட விடல.. இதை வெளிய சொன்னா ரத்தம் கக்கி செத்துரூவீங்க..! சொல்வதெல்லாம் பொய்யான சோகம்.!

Posted Jun 30, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

புது நன்மைக்காக நீராடிய இளைஞர் மீது பாய்ந்தது மின்சாரம்..! ஆசி வழங்கிய பாதிரியார் அதிர்ச்சி..!


Advertisement