செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மாயமான சிறுமி மரணம்.. இளைஞன் உட்பட 8 பேர் கைது

Mar 07, 2022 07:11:15 AM

மதுரை மேலூர் அருகே மாயமான சிறுமி எலி மருந்து சாப்பிட்டதால் உயிரிழந்த நிலையில், அவரை காதலிப்பதாகக் கூறி அழைத்துச் சென்ற இளைஞன், அவனது தாய் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மேலூர் அருகே தும்பைப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த மாதம் 14ஆம் தேதி அதே ஊரைச் சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற இளைஞனுடன் மாயமானார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி உடல்நிலை பாதித்திருந்த சிறுமியை அவரது வீட்டில் கொண்டு வந்து நாகூர் ஹனிபாவின் தாய் விட்டுச் சென்றுள்ளார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், நாகூர் ஹனிபா, அவனது பெற்றோர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம் செய்துகொள்வதாக சிறுமியை அழைத்துச் சென்ற நாகூர் ஹனிபா மதுரையிலுள்ள நண்பர் வீட்டிலும் பிறகு ஈரோட்டிலுள்ள உறவினர் வீட்டிலும் தங்கவைத்து கணவன் - மனைவி போல குடும்பம் நடத்தி வந்துள்ளான் என போலீசார் தெரிவித்தனர்.

ஒரு கட்டத்தில் தங்களை போலீஸ் தேடுவது குறித்து தாய் மூலம் அறியவந்த நாகூர் ஹனிபா, தற்கொலை செய்துகொள்ளலாம் என சிறுமியிடம் கூறி எலி பேஸ்ட் விஷத்தை வாங்கி வந்துள்ளான். சிறுமி மட்டும் அதனை சிறிதளவு சாப்பிட்டதாகவும், நாகூர் ஹனிபா திடீரென தற்கொலை முடிவை கைவிட்டு விஷம் சாப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது.

எலி பேஸ்ட் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு சில நாட்கள் வைத்து சிகிச்சை அளித்த பின்னரே சிறுமியை வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர் என்றும் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் கூறினார்.

மருத்துவர்களின் முதற்கட்ட அறிக்கையின்படி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதும் போதை ஊசிகள் அவருக்கு செலுத்தப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாகக் கூறிய எஸ்.பி. பாஸ்கரன், சிறுமியின் கையிலிருந்த ஊசி தழும்புகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும்போது செலுத்தப்பட்டவை என்றார். 

இந்த விவகாரம் தொடர்பாக நாகூர் ஹனிபா, அவனது பெற்றோர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நாகூர் ஹனிபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி. பாஸ்கரன் கூறினார்.

நாகூர் ஹனிபா வாங்கி வந்த எலி பேஸ்டை சாப்பிட்டதால் சிறுமி உயிரிழந்தது தெரியவந்துள்ள நிலையில், கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்படும் எனவும் எஸ்.பி. கூறினார். இந்த சம்பவத்தில் சிறுமி 18 வயதுக்குக் கீழானவர் என்பதால் அவருடைய புகைப்படத்தையோ, பெயரையோ, தவறான தகவல்களையோ வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். 

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்ததை அறிந்த அவரது உறவினர்கள், பொதுமக்கள் ஒன்று கூடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். பேச்சுவார்த்தைக்குச் சென்ற போலீசார் மீதும் அவ்வழியாகச் சென்ற அரசுப் பேருந்து மீதும் அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், பேருந்தில் பயணித்த சிலர் காயமடைந்தனர். இதனையடுத்து லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார், கல்வீச்சில் ஈடுபட்டவர்களை விரட்டி விரட்டி கைது செய்தனர்.


Advertisement
நலத்திட்ட உதவி வழங்குவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி..! பொதுமக்களிடம் பணம் வசூலித்த தம்பதியர் கைது
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை... சிகிச்சை பெற வந்தவர்கள் செவிலியரால் அலைக்கழிப்பு
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 3வது வார பூச்சொரிதல் விழா: திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அம்மனுக்கு பூச்சாற்றி வழிபாடு!
கடும் விஷமுள்ள கண்ணாடி விரியனை பிளாஸ்டிக் டப்பாவில் பிடித்த நபர்.. பாம்பினை ஒப்படைக்க ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கினார்!
தென்னிந்திய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக, கர்நாடக அணிகள்..!
வீட்டில் ஸ்கேன் எந்திரம் மூலம் பாலின சோதனை நடத்த ரூ.26,400 வசூலித்த 3 பேர் கைது!
அதிமுகவில் என்னை போல் ஒரு லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள் - இ.பி.எஸ்
விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்களின் பற்களை போலீசார் பிடுங்கியதாக புகார்.. மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு..!
ஆலங்குடியில் கோயில் குடமுழுக்கு நிகழ்வுக்கு சமய வேறுபாடுகளின்றி சீர்வரிசை கொண்டு வந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்..!
ஜே.சி.பி ஐ கொண்டு எம் சாண்ட், ரெட்டி மிக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் நுழைப்பாதையில் குழிதோண்டி போராட்டம் நடத்திய பொதுமக்கள்..!

Advertisement
Posted Mar 26, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இருப்பதை விட்டு பறக்க... இல்ல, பரிதவிக்க ஆசையா? பைனான்ஸில் பணம் போடுங்கள்..! அரசனை நம்பி ஆண்டிகளான முதலீட்டாளர்கள்

Posted Mar 26, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உயிரே காதலிக்கு தான்... அரசுப்பேருந்தை மறித்த மாமாக்குட்டிக்கு தர்ம அடி..! மனைவி கொடுத்த புகாரில் சம்பவம்

Posted Mar 25, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இன்ஸ்டா காதல் இம்சை ரவுடி.. பேபி டீச்சரக்காவை போலீஸ் தேடுகின்றதாம்..! ராணுவ வீரரையே வீழ்த்திட்டாராம்.!

Posted Mar 25, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

19 மாடி கட்டிடமாம்.. மின் இணைப்பு இல்லையாம்.. ரூ 8 கோடி கேக்குறாங்களாம்..! என்னடா பித்தலாட்டமா இருக்கு.?

Posted Mar 25, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

இவ்வளவு வேகமாக ராகுலின் எம்.பி பதவி பறிபோக காரணம் யார் தெரியுமா.? அவரே தான் இவர்... இவரே தான் அவர்..!


Advertisement