காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் 500 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில், சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் திருவிடந்தை- சாலவாக்கம் கிராமங்களிடையே மண்டல, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.