சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த 8 வயது சிறுமி கடலில் 18 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்தி கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தயுள்ளார்.
தாரகை ஆராதனா என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமியின் தந்தை ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் என்பதால் கடந்த 3 ஆண்டுகளாக தீவிர நீச்சல் பயிற்சியில் தாரகை ஆராதனா ஈடுபட்டு வருகிறார்.
கோவளம் முதல் நீலாங்கரை வரை நீச்சலடித்து வந்த சிறுமிக்கு கடற்கரையில் இருந்தவர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.