திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம் பேட்டை பகுதியில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு கேட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலமாற்றம், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஜவுளி உற்பத்தியாளர்களிடமிருந்து குறிப்பிட்ட சதவீத கூலி உயர்வை பெற்றுத் தருவதற்காக கடந்த 1992-ம் ஆண்டு தொடங்கி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் கடைபிடிக்கப்பட்டு வந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் கூலி உயர்வு ஒப்பந்தம் சரிவர கடைபிடிக்கப்படாமல் போனதாகக் கூறப்படுகிறது. புதிய கூலி உயர்வு ஒப்பந்தப்படி டிசம்பர் 1-ம் தேதி முதல் சோமனூர் ரகத்துக்கு 23 சதவீதமும், இதர ரகங்களுக்கு 20 சதவீதமும் கூலி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் கூலி உயர்வு வழங்கப்படவில்லை எனக் கூறி இந்த கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.