விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து 7 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகளை துவக்கி வைத்த எம்.எல்.ஏ லட்சுமணன், பேருந்து ஒன்றை சில அடி தூரம் இயக்கிப் பார்த்தார்.
விழுப்புரத்திலிருந்து வானூர், சின்னமடம், கீழ்பெரும்பாக்கம் உட்பட 7 புதிய வழித்தடங்களில் கடந்த 8 ஆண்டுகளாக பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து அந்தப் பேருந்துகளை விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணனும் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தியும் தொடங்கி வைத்தனர்.
அப்போது பேருந்து ஒன்றில் ஏறிய எம்.எல்.ஏ லட்சுமணன், அதனை சிறிது தூரம் இயக்கிப் பார்த்தார்.