நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது ஒரே நாளில் இரண்டு முறை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி பொருட்களை களவாடிச் சென்றுள்ளனர்.
புஷ்பவனம் மீனவ கிராமத்தை சேர்ந்த 3 மீனவர்கள் அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குள் சென்றபோது, அவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர் என்று கூறப்படுகிறது.
3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காலை அதே கிராமத்தைச் சேர்ந்த சுமார் 8 பேர் புஷ்பவனத்திற்கு தென்கிழக்கே 30 நாட்டிகல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்துள்ளனர்.
கையில் ஆயுதங்களுடன் மீனவர்களின் படகுக்குள் ஏறியவர்கள், அவர்களைத் தாக்கிவிட்டு, பேட்டரி, ஜி.பி.எஸ் கருவி, உட்பட சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர் என்று கூறப்படுகிறது.