செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஹரி நாடாருக்காக அடித்துக் கொள்ளும் ஷாலினி - மலேசியா மஞ்சு.. இதுவே பெரிய பஞ்சாயத்தா இருக்கும் போல..!

Jan 23, 2022 07:54:32 AM

நடிகை விஜயலெட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை, மலேசிய பெண்ணின் பிடியில் இருந்து மீட்டு, தன்னுடன் சேர்த்து வைக்குமாறு முதல் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஒரு காலத்தில் நடமாடும் நகைக்கடையாக வலம் வந்த ஹரி நாடார், மோசடி வழக்கில் சிக்கியதால் பெங்களூரு போலீசார் அனைத்து நகைகளையும் பறிமுதல் செய்த நிலையில் அவரது அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. தற்போது விஜயலெட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான ஹரி, சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வழக்கு செலவுக்கு கூட பணமின்றி தவித்து வரும் அவர், பனங்காட்டுப்படை கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஹரி நாடாரின் முதல் மனைவி ஷாலினி, நெல்லை காவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள மனுவில் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார்.

அதில், கேரளாவில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்த போது கடந்த 2011 ஆம் ஆண்டில் தன்னுடன் வேலைபார்த்த ஹரியை திருமணம் செய்ததாகவும், அவர் சென்னையில் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வசதி வாய்ப்புகள் பெருகிய பின்னர் தன்னையும் மகனையும் கவனிக்காமல் விட்டுச்சென்றதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தன்னை தொடர்பு கொண்ட, மலேசியாவை சேர்ந்த மஞ்சு என்ற பெண் தன்னை ஹரியின் மனைவி என்றும் தங்களுக்கு 2 மகள்கள் இருப்பதாக கூறியதோடு ஹரியை மறந்துவிடுமாறு மிரட்டியதாக ஷாலினி தெரிவித்துள்ளார்.

மஞ்சுவின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு ஹரி தன்னை விவாகரத்து செய்ய முயன்றதாகவும், தான் பிரிந்து செல்ல சம்மதிக்காத நிலையில் அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்ததாக ஷாலினி கூறியுள்ளார்.

கேரளாவில் மஞ்சுவுடன் இருக்கும் போது பெங்களூரு போலீசார் ஹரியை பிடித்துச் சென்ற போது, மஞ்சுவை அவரது மனைவி என போலீசார் தவறாக பதிவு செய்ததால் பரப்பன அஹ்ரகார சிறையில் இருந்த கணவர் ஹரியை சந்திக்க மனு அளித்தும் தன்னால் பார்க்க இயலவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தற்போது கூட தன்னை செல்போனில் தொடர்பு கொள்ளும் மலேசியா மஞ்சு, மிரட்டி வருவதாகவும், அவரிடம் இருந்து தனது கணவர் ஹரியை மீட்டு தன்னுடன் சேர்ந்து வாழவைக்க வேண்டும் என்று அந்த மனுவில் ஷாலினி தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த வழக்குகளாலும், கோடிக்கணக்கில் பிணைத்தொகை கேட்பதாலும், சிறையில் இருந்து வெளியே வர இயலாமல் ஹரி தவித்து வரும் நிலையில், அவருக்காக இரு பெண்கள் தாங்கள் தான் மனைவி என்று அடித்துக் கொள்வது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
குப்பை கிடங்கிற்கு தீ வைத்து சுகாதார ஆய்வாளர் ரீல்ஸ்..! இந்த விளம்பரம் தேவையா?
பில்லி சூனியம் வைத்ததாக கருதி தம்பதி கடத்திக் கொலை..! ஓடும் காரிலிருந்து சடலங்கள் வீச்சு..!
போக்சோ வழக்கில் உள்ளே போயும் புத்திவராத ஜென்மம்..! சிறுவனை சித்ரவதை செய்து சிக்கினார்..!
வணக்கம் என தமிழில் கூறி தன் உரையை ஆரம்பித்த பிரதமர் மோடி..!
தங்கச்சின்னு சொன்னாலும் கேட்க மாட்டீங்களாடா... காப்பு மாட்டிய போலீஸ்..! கல்லூரிக்குள் சென்று மாணவியிடம் வம்பு
இறைச்சி துண்டு தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவி பலி..! வீட்டில் சமைத்தாலும் கவனம் தேவை..!
மர நிழலுக்காக கடலை கடையில் உருவான கலவரம்.. பூராபேரும் கோபக்காரய்ங்களா இருக்காய்ங்க..!
கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்.. 6 பேரின் மண்டை, முது கெலும்பு உடைப்பு.. சாலையை மறித்து போராட்டம்..! ராமேஸ்வரம் சென்ற பயணிகள் தவிப்பு..!
"ரெண்டு நாளில் அவனை போடுறேன்".. சொன்னதைச் செய்த ரௌடி..!
நியூ ஸ்கார்பியோவை அணுகுண்டால் மட்டுமே தகர்க்க முடியுமாம்..! இது என்ன.. புது புரளியா இருக்கு.!

Advertisement
Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

குப்பை கிடங்கிற்கு தீ வைத்து சுகாதார ஆய்வாளர் ரீல்ஸ்..! இந்த விளம்பரம் தேவையா?

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பில்லி சூனியம் வைத்ததாக கருதி தம்பதி கடத்திக் கொலை..! ஓடும் காரிலிருந்து சடலங்கள் வீச்சு..!

Posted May 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

போக்சோ வழக்கில் உள்ளே போயும் புத்திவராத ஜென்மம்..! சிறுவனை சித்ரவதை செய்து சிக்கினார்..!

Posted May 26, 2022 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

வணக்கம் என தமிழில் கூறி தன் உரையை ஆரம்பித்த பிரதமர் மோடி..!

Posted May 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

தங்கச்சின்னு சொன்னாலும் கேட்க மாட்டீங்களாடா... காப்பு மாட்டிய போலீஸ்..! கல்லூரிக்குள் சென்று மாணவியிடம் வம்பு


Advertisement