கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தெலுங்குப்பட்டி பொருந்தலுரைச் சேர்ந்த பாரதியார் என்பவன், கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பலவந்தமாகக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தான்.
இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாரதியார், பின்னர் ஜாமீனில் வெளிவந்தான். இந்த வழக்கில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தீர்ப்பளித்த மகிளா நீதிமன்ற நீதிபதி நசீமா பானு, அவனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதத் தொகையை சிறுமியின் புனர்வாழ்வுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.