கன்னியாகுமரியில் சட்டவிரோதமாக வீட்டில் மது விற்ற பெண்ணை மிரட்டி பணம் பறித்து அவரது மகளை ஆசைக்கு இணங்க கேட்ட ஊர்க்காவல் படையை சேர்ந்த இரண்டு பேரில் ஒருவன் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருக்கும் மற்றொருவனை போலீசார் தேடி வருகின்றனர்.
அருமனை மஞ்சாலுமூடு பகுதியில் கில்டா மேரி என்ற பெண் தனது வீட்டில் மது பாட்டில்கள் வாங்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்து வந்த சசிதரன் நாயர் ,ரீகன் ஆகிய இருவர், தாங்கள் அருமனை காவல் நிலைய ஆய்வாளர்கள் என கூறியதோடு , நடவடிக்கை எடுக்காமல் இருக்க மகளை விருந்தாக்க வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சேர்ந்து இருவரையும் சுற்றிவளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பியோடிய ரீகனை போலீசார் தேடி வருகின்றனர்.