செங்கல்பட்டு அருகே விவசாயக் கிணறு ஒன்றில் இருந்து தந்தை, இரு மகள்கள் என 3 பேரின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மறைமலைநகர் அடுத்த கடம்பூர் பகுதியிலுள்ள அந்தக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அந்த சடலங்கள் சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஞானவேல் மற்றும் 5 மற்றும் 3 வயதான அவருடைய மகள்கள் என்பது தெரியவந்தது.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 3 நாட்களுக்கு முன் தனது ஆட்டோவில் மகள்களை அழைத்துக் கொண்டு ஞானவேல் வீட்டை விட்டு வெளியேறினார் என்று கூறப்படுகிறது.
எனவே மகள்களைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு காரணங்களா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.