செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தொழில்நுட்பம்

பிளக்-பாயிண்டில் சொருகப்பட்ட பிளக்கை நாணயத்தால் தொடுமாறு சிறுமிக்கு சவால் விடுத்த அலெக்சாவால் சர்ச்சை...!

Dec 29, 2021 07:39:18 PM

அமெரிக்காவில், 10 வயது சிறுமிக்கு, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய சவாலை அமேசானின் அலெக்சா (Alexa) வாய்ஸ் அசிஸ்டெண்ட் விடுத்தது பலத்த சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், தற்போது தவறு சரி செய்யப்பட்டுள்ளதாக அமேசான் விளக்கமளித்துள்ளது.

ஸ்மார்ட் டிவி, ஸ்பீக்கர், ஸ்மார்ட் லைட் சாதனங்களை இயக்குவது மட்டுமின்றி வானிலை, விளையாட்டு ஸ்கோர் என மனிதர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு இணையத்தில் தேடி விடையளிக்கும் வாய்ஸ் அசிஸ்டெண்டாக அலெக்சா ஸ்மார்ட் ஸ்பீக்கர் இயங்கி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த 10 வயது சிறுமி வீட்டில் பொழுது போகாததால், தனக்கு ஒரு சவாலை விடுமாறு அலெக்சா-விடம் கேட்டுள்ளார். இணையத்தை அலசிய அலெக்சா, பிளக்-பாயிண்டில் சொருகப்பட்ட பிளக்கை நாணயத்தால் தொடுமாறு சிறுமிக்கு சவால் விடுத்துள்ளது.

அவ்வாறு செய்தால் மின்சாரம் தாக்கக்கூடும் என்பதால் சிறுமி அதனை செய்ய மறுத்துவிட்டார். கடந்தாண்டு டிக்-டாக்கில் பிரபலாமான இந்த பென்னி சாலஞ்சை (penny challenge) செய்ய முயன்ற பலருக்கு மின்சாரம் பாய்ந்து விரல்கள், கைகள் பாதிக்கப்பட்ட நிலையில் 10 வயது சிறுமிக்கு அலெக்சா இப்படி ஒரு அபாயகராமான சவாலை விடுத்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து சிறுமியின் தாயார் ட்விட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், தவறை சரி செய்து, அலெக்சா அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.


Advertisement
ஹோண்டா CB300F இருசக்கர வாகனம் இந்தியாவில் அறிமுகம்
ஆப்பிள் ஐபோன் 14 ரக செல்போன் அடுத்த மாதம் அறிமுகமாக வாய்ப்பு
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வருகிறது கூகுள் ஸ்டீரீட் வியூ அம்சம்..!
வால்வோ எக்ஸ். சி. 40 மின்சார கார் இந்தியாவில் அறிமுகம்
இனி போட்டோவையும் ரீல்ஸாக பதிவிடலாம் - இன்ஸ்டாகிராமில் வருகிறது புது அம்சம்..!
சாலையில் சென்றுகொண்டிருந்தபோதே தீப்பிடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டர்
ஏர்டெல்லின் 1.2 சதவிகித பங்குகளை வாங்கிய கூகுள்
டொயோட்டாவின் அர்பன் குரூயிசர் ஹைரைடர் எஸ்யுவி மாடல் இ-கார் அறிமுகம்
வாட்ஸ் ஆப்பில் தகவல்களை அழிப்பது தொடர்பாக வருகிறது புது அப்டேட்
கார்கள், படகுகள், விமானங்களுக்கு இணையவசதி வழங்க ஸ்டார்லிங்கிற்கு ஒப்புதல்

Advertisement
Posted Aug 18, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு...! மாடலுடன் டுகாட்டி காதலன் டூயட்டு..! ஆட்டம் போட்டவனுக்கு போலீஸ் ஆப்பு

Posted Aug 18, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெட்டி இங்கே.. தங்கம் எங்கே..? ஊர் குருவி கள்ள பருந்தானது..! கண்ணாமூச்சி ரே.. கண்டுபிடி யாரே..!

Posted Aug 17, 2022 in சென்னை,Big Stories,

சென்னை நிதிநிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை.. கத்திமுனையில் கைவரிசை..!

Posted Aug 17, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கஞ்சா குடிக்கி இளசுகள் ஓட்டலில் அட்டகாசம்.. கொலை வெறி தாக்குதல்..! இதற்கு என்ன தான் தீர்வு..?

Posted Aug 16, 2022 in சென்னை,Big Stories,

15 நிமிடங்களில் 32 கிலோ நகைகளை திருடியது எப்படி? முக்கிய கொள்ளையன் பரபரப்பு தகவல்..!


Advertisement