செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் சொடக்கு மேல சொடக்கு போடுது பாடலின் நடன அசைவுகளின் மூலம் தமிழ் எழுத்துகளை மாணவர்களுக்கு கற்பிக்கும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
மாமண்டூர் நடுநிலைப்பள்ளி ஆசிரியையான கவிதா, தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு பரதநாட்டிய அசைவுகளின் மூலமும், சினிமா பாடலின் நடன அசைவுகளின் மூலமும் அகரவரிசைப்படி தமிழ் எழுத்துகளை கற்பிக்கிறார்.