செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அருவிபோல் ஊற்றும் தண்ணீரும்... நிரம்பாத அதிசயக் கிணறும் : வியக்கும் மக்கள்

Nov 29, 2021 07:15:07 PM

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே எவ்வளவு நீர் சென்றாலும் உள்வாங்கிக் கொண்டு எப்போதுமே நிரம்பாத அதிசயக் கிணறு பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழையில் ஏரிகள், குளங்கள், கிணறுகள் என யாவும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் நெல்லை அருகே எவ்வளவு தண்ணீர் வந்தாலும் உள்வாங்கும் அதிசயக் கிணறு ஒன்று பலரையும் தன்னை நோக்கி இழுத்து வருகிறது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ளது ஆயன்குளம் படுகை. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பெய்து வரும் தொடர் கனமழையில் ஆயன்குளம் படுகை நிரம்பியுள்ளது.

இந்தப் படுகையிலிருந்து வெளியேறும் தண்ணீரானது அருகில் தனியாருக்குச் சொந்தமான கிணறு ஒன்றுக்கு வாய்க்கால் வழியாகச் செல்கிறது. அத்துடன் கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணை தேக்கத்திலிருந்து திறக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் கனஅடி தண்ணீரின் ஒரு பகுதியும் இந்த கிணற்றுக்குத்தான் செல்கிறது.

சுமார் 50 கன அடி தண்ணீர் அந்தக் கிணற்றுக்குள் அருவில்போல் ஊற்றுகிறது. பல நாட்களாக தண்ணீர் கிணற்றுக்குள் செல்லும் நிலையில், கிணறு நிரம்பவே இல்லை.

மழைக்காலம் மற்றும் அணை திறப்பு காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு எவ்வளவு நீர் இந்த கிணற்றுக்குள் சென்றாலும் கிணறு நிரம்பியதே இல்லை என்று கூறப்படுகிறது. இந்த அதிசய கிணற்றை சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டார்.

இந்தக் கிணற்றுக்குள் விழும் தண்ணீர் எங்கே செல்கிறது என்ற முறையான ஆய்வு இதுவரை செய்யப்படவில்லை என்று கூறப்படும் நிலையில், அப்பகுதி விவசாயிகள், கிணற்றுக்குள் தெர்மாக்கோல் துண்டுகளையும் பூக்களையும், சிறு சிறு பாசிகளையும் உள்ளே போட்டு, அவை எங்கே செல்கிறது என பார்த்ததாகவும் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிணறுகளில் அவை மிதந்ததாகவும் கூறுகின்றனர்.

இந்த அதிசயக் கிணற்றால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்வதாகக் கூறும் விவசாயிகள், உப்பு நீர் நன்னீராக மாறுவதாகவும் கூறுகின்றனர்.

தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி, வீணாகக் கடலில் சென்று கலக்கும் தண்ணீரை இந்தக் கிணற்றுக்கு திருப்பிவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்துக்கு இடமில்லை - அமைச்சர் சேகர்பாபு
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் திருத்தியதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனு.. வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.!
பெரியார் சிலையை உரசி உடைத்த லாரி..! பின்னணியில் சதியா ? போலீசாரிடம் வாக்குவாதம்..!
தமிழகத்தில் 30 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு.!
"59 இடங்களில் புதிய நெல் கொள்முதல் நிலையங்கள்" - அமைச்சர் தாமோ அன்பரசன்
மொட்டை மாடியில் விளையாடியபோது விபரீதம் ; மின் கம்பி உரசியதில் தூக்கி வீசப்பட்ட சிறுமிகள்
"சென்னையில் கொரோனா பாதிப்பு குறைகிறது" - மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி
குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு
கோயமுத்தூரில் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து கல்குவாரி உரிமையாளர் வீட்டில் 20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்ற 7 பேர் கைது.!
கரூரில் 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.!

Advertisement
Posted Jan 21, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பெரியார் சிலையை உரசி உடைத்த லாரி..! பின்னணியில் சதியா ? போலீசாரிடம் வாக்குவாதம்..!

Posted Jan 21, 2022 in சென்னை,Big Stories,

96 ஐ கொண்டாடிய 60..! மறக்க இயலா பள்ளி.. பூச்செடியாய் மலர்ந்த நினைவுகள்..!

Posted Jan 21, 2022 in சற்றுமுன்,இந்தியா,வீடியோ,Big Stories,

மன்மத கணவன் தலையை வெட்டி பையில் போட்டு மனைவி போலீசில் சரண்.. பிறன் மனை நோக்கியதால் ஆத்திரம்.!

Posted Jan 20, 2022 in வீடியோ,Big Stories,

ஹாலிடே காதல் கசந்த திருமணம் கண்ணீரில் கன்னிஸ்..! உஷாரா இல்லைன்னா உபத்திரம் தான்..!

Posted Jan 19, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு...! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்


Advertisement