செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கனமழையால் வெள்ளம்.. தோட்டப் பயிர்கள் பாதிப்பு

Nov 29, 2021 01:20:38 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவியை மூழ்கடித்து வெள்ளம் பாய்கிறது. தாமிரபரணியில் வெள்ளத்தால் கரையோரத்தில் உள்ள தென்னந்தோப்புகள், வாழைத்தோட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து ஐந்து மணி நேரம் கனமழை பெய்தது. கால்வாய்கள், ஓடைகளில் அதிகப்படியான வெள்ளம் பாய்ந்ததால் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. கடையால் அருகே கைதக்கல் என்னுமிடத்தில் வெள்ளத்தால் வீட்டின் மதில் இடிந்ததுடன் காரும், இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன.

 

கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்ததால் அவற்றில் இருந்து பத்தாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் தடுப்பு வேலியையும், கல்மண்டபத்தில் பாதியையும் மூழ்கடித்து வெள்ளம் ஆர்ப்பரித்துப் பாய்கிறது.

 

கனமழையாலும் அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரத்தில் வாழைத்தோட்டங்கள், தென்னந்தோப்புகள், ரப்பர் தோட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை, தரைப்பாலம் ஆகியவற்றை மூழ்கடித்து வெள்ளம் பாய்கிறது.

 

நெய்யாறு இடதுகரைக் கால்வாயில் கேரள அரசு 18 ஆண்டுகளாகத் தண்ணீர் விடாத நிலையில் அதன் பாசனப் பகுதியான மீனச்சலில் விவசாயிகள் நெல் பயிரிடாமல் வாழை, ரப்பர், தென்னை, மரவள்ளி, ஆகியவற்றைப் பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கனமழையால் நெய்யாறு கால்வாயில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டதால் தென்னந்தோப்புகள், வாழைத்தோட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன், நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.


Advertisement
தமிழகத்தில் இன்று 26,981 பேருக்கு கொரோனா உறுதி : 35 பேர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலி
முன்னாள் நீதிபதி தலைமையில் புதிய காவல் ஆணையம் : காவலர்கள், மக்கள் இடையே உறவை மேம்படுத்த முதலமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் : அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தல்
நடத்தையில் சந்தேகம் கொண்டு கணவர் கைவிட்டுவிட்டதாக கூறி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட 5 மாத கர்ப்பிணி
சட்டவிரோதமாக வீட்டில் மது விற்ற பெண்ணிடம் மகளை விருந்தாக்க வேண்டும் என மிரட்டிய ஊர்க்காவல் படையை சேர்ந்த 2 பேர்.. ஒருவன் கைது
மனைவியுடன் கருத்து வேறுபாடு.. விவசாயக் கிணற்றில் தந்தை, இரு மகள்கள் சடலங்களாக மீட்பு
புதுச்சேரியின் வரலாறும் தமிழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் - லியோனி
கிருஷ்ணகிரியில் புதிய தாது உப்பு கலவை தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
கன்னியாகுமரியில் 12 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் படகுப் போக்குவரத்து தொடக்கம்

Advertisement
Posted Jan 19, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு...! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்

Posted Jan 19, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தங்கவளையலை திருடிய ஜாக்கெட் கொள்ளைகாரிகள்... திருச்செந்தூரிலிருந்து திண்டுக்கலுக்கு ஓட்டம்.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரஜினி மகள் - நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து.. நட்சத்திர காதல்களால் விரிசல்..!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

6 பேரை பலி வாங்கிய ஆற்றுநீர்ச் சுழல்.. தேவை ஒரு எச்சரிக்கைப் பலகை.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ 5 லட்சத்துக்காக கட்டிய வேட்டியை இழந்த திருடர் ஜட்டியுடன் தப்பிய காட்சிகள்..! எடுத்தான் பாரு ஓட்டம்…!


Advertisement