செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
Big Stories

25 ஆண்டு கால குடும்ப நண்பர்.. வில்லனான பின்னணி.!

Nov 29, 2021 09:54:46 AM

அமெரிக்காவில் படிக்கும் இளம்பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி, மாணவியின் தாயிடம் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய வழக்கில் மென்பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, மாநகராட்சியில் பணிபுரியும் பெண் அதிகாரியின் மகள் ஒருவர் அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக படித்து வந்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் மர்ம நபர் ஒருவர் அந்த அதிகாரியின் வாட்ஸ் அப்பில் அவரது 26 வயது மகளின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார். 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் எனவும் இல்லை என்றால் இந்த படங்களை இணையதளங்களில் வெளியீட்டு அதைவிட அதிகமாக சம்பாதித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண் அதிகாரி அளித்த புகாரில் டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அந்த நபர் போரூர் லட்சுமி நகர் இரண்டாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த 51 வயதான ரமேஷ் என்பது தெரியவந்து அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கைதான ரமேஷ் அமெரிக்காவில் மென் பொறியாளாராக வேலை பார்த்து வருபதும், கடந்த சில ஆண்டுகளாக தனது குடும்பத்தோடு ரமேஷ் அமெரிக்காவில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும், ரமேஷின் குடும்பமும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பமும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப நண்பர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும் தெரியவந்தது. 

ரமேஷின் மனைவியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரும் கல்லூரி நண்பர்கள் என்பதால் அதன் மூலமாக குடும்ப நண்பர்களாக ஆனதும் தெரியவந்தது.
கடந்த 2019-ம் ஆண்டு அரசு அதிகாரியின் மகளான அந்த இளம்பெண் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு இவர்களது குடும்ப நண்பரான ரமேஷின் வீடு உள்ள பகுதியான சான் பிரான்சிஸ்கோவில் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இளம்பெண் தங்கி படித்து வந்துள்ளார். நெருங்கிய உறவினர்கள் போல் உள்ள நண்பரின் குடும்பம் அங்கு இருப்பதால் மகள் பற்றிய கவலை இல்லாமல் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இளம்பெண்ணுக்கு சற்று மன நலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் 12 நாட்கள் தங்கி சிகிச்சைப்பெற்று வந்துள்ளார். அப்போது இளம்பெண்ணின் குடும்ப நண்பர்களான ரமேஷ் மற்றும் ரமேஷின் குடும்ப உறுப்பினர்கள் கவனித்து வந்துள்ளார்கள் என்பதும் தெரியவந்தது.

அந்த சமயத்தில் இளம்பெண் சாப்பிட, குளிக்க போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு இளம்பெண்ணுக்கு உதவி தேவைப்பட்டது. அதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட ரமேஷ் தனது குடும்பத்தினர் இல்லாதபோதும், மன நலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை ஆபாசமாக, ரமேஷ் தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்துக்கொண்டதும் தெரியவந்தது. பின்பு சிகிச்சை முடித்து இளம்பெண்ணை சென்னை அழைத்து அவரது தாயிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில்தான் அந்தப் இளம்பெண்ணை ரமேஷ் தன்னுடனே வைத்துக் கொள்வதற்கு ஆசைப்பட்டு உள்ளார். 

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு பணத் தேவைக்கு ரமேஷ் 50 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்திருப்பதாகவும் அந்த பணத்தை வாங்குவதற்காக சமீபத்தில் ரமேஷ் சென்னை வந்துள்ளார். அதே வேளையில் தற்போது நலமுடன் இருக்கும் இளம்பெண்ணுக்கு திருமணம் முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதால், தற்போது பணம் எதுவும் இல்லை என அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். பெண்ணின் திருமணத்தை நிறுத்துவதோடு தான் கொடுத்த பணத்தையும் வேறு விதத்தில் வாங்க குறுக்கு வழியில் யோசித்த ரமேஷ், அமெரிக்காவில் இருந்து பயன்படுத்துவது போன்று சிம்கார்டு ஒன்றை வாங்கி யாரோ ஒரு நபர் போல, பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அவரது தாயாருக்கு அனுப்பி 2 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும், பணம் தராவிடில் இணையதளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து அதை விட அதிக பணம் சம்பாதித்து விடுவதாவும் மிரட்டியுள்ளார்.

குறிப்பாக இப்படி ஒரு மிரட்டல் வந்ததும் இளம்பெண்ணின் தாயார் என்ன செய்வது எனத் தெரியாமல், தனது குடும்ப நண்பரான ரமேஷிடமே கூறி கதறி அழுத்துள்ளார். மேலும், அதற்கு ரமேஷ் நம்முடைய பெண்னை வைத்து மிரட்டும் நபரை நான் கண்டறிந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறேன் என்று கூறி நாடகம் ஆடியுள்ளான். இதனிடையே மாநகராட்சி அதிகாரியான இளம் பெண்ணின் தாயார் புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தியதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப நண்பரான ரமேஷ் தான் புகைப்படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டியது என தெரியவந்து பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த டி.பி.சத்திரம் போலீசார் அமெரிக்க வாழ் இந்தியரான
ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement
ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு...! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்
தங்கவளையலை திருடிய ஜாக்கெட் கொள்ளைகாரிகள்... திருச்செந்தூரிலிருந்து திண்டுக்கலுக்கு ஓட்டம்.!
ரஜினி மகள் - நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து.. நட்சத்திர காதல்களால் விரிசல்..!
6 பேரை பலி வாங்கிய ஆற்றுநீர்ச் சுழல்.. தேவை ஒரு எச்சரிக்கைப் பலகை.!
ரூ 5 லட்சத்துக்காக கட்டிய வேட்டியை இழந்த திருடர் ஜட்டியுடன் தப்பிய காட்சிகள்..! எடுத்தான் பாரு ஓட்டம்…!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதலமைச்சர் பெயரில் கார் பரிசு.!
தண்டவாளத்தில் ‘குடி’ : ரெயில்வே போலீசாரிடம் வம்பிழுத்த இளைஞர்கள்... துப்பாக்கியுடன் போலீஸ் கெஞ்சல்
ஊரடங்கு வசூல் ராஜாக்கள்... கதறும் ரெயில் பயணிகள்... 10 மடங்கு கூடுதல் கட்டணம்
வீடுகளில் வருகிறது, மின்சார வாகனங்களுக்கான பொது சார்ஜிங் மையம்
இளவட்டக் கல் தூக்கும் போட்டி... பெண்களும் கல் தூக்கி சாதனை

Advertisement
Posted Jan 19, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு...! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்

Posted Jan 19, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தங்கவளையலை திருடிய ஜாக்கெட் கொள்ளைகாரிகள்... திருச்செந்தூரிலிருந்து திண்டுக்கலுக்கு ஓட்டம்.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரஜினி மகள் - நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து.. நட்சத்திர காதல்களால் விரிசல்..!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

6 பேரை பலி வாங்கிய ஆற்றுநீர்ச் சுழல்.. தேவை ஒரு எச்சரிக்கைப் பலகை.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ 5 லட்சத்துக்காக கட்டிய வேட்டியை இழந்த திருடர் ஜட்டியுடன் தப்பிய காட்சிகள்..! எடுத்தான் பாரு ஓட்டம்…!


Advertisement