செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

"ஆன்லைன் ரம்மியில்" பறிபோன பல லட்சம்.! "கருவூலத்திலேயே" கைவைக்க முயன்ற காவலர்

Nov 28, 2021 07:11:14 AM

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்ச ரூபாயை இழந்த முதல்நிலை காவலர் ஒருவர், அரசு கருவூலத்தில் திருட முயன்று அது தோல்வியில் முடியவே, வழக்குப்பதிவுக்கு உள்ளாகி தலைமறைவாகியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அரசு கருவூலம் இயங்கி வருகிறது. இந்த கருவூலத்திலிருந்து தான் அனைத்து அரசு துறையினருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் சம்பளம் பட்டுவாடா ஆகும்.

முத்திரைத்தாள் விற்பனையும், வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் விலைமதிப்பற்ற பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பதும் இங்குதான். அதிக பணப்புழக்கம் இருக்கும் இந்த அரசு கருவூலத்தில் ஒரு அறை ஒதுக்கப்பட்டு, காலை முதல் மாலை வரையிலும், இரவு முதல் மறுநாள் காலை வரையிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து கடந்த 8 ஆம் தேதி அன்று காலை வழக்கம்போல அரசு கருவூல அலுவலர் அலுவலகத்தை திறக்க வந்த பொழுது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த பொழுது பாதுகாப்பு பெட்டக அறை எனப்படும் சேமிப்பு கிடங்கு அறையின் கதவையும் கல்லால் அடித்து உடைக்க முயற்சி நடைபெற்றிருப்பது தெரியவந்தது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதிகாலை சுமார் மூன்று அடி உயரம் உள்ள காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி குதித்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள், அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவலர் உணவருந்தச் சென்ற நேரம் பார்த்து, திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. பணம், நகை உள்ளிட்டவற்றை பாதுகாத்து வைத்திருக்கும் ஸ்ட்ராங் ரூம் கதவை உடைக்க முடியாமல் போகவே, அவர்கள் தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த நேரத்தில் அங்கு பதிவான செல்போன் எண்களை வைத்து, சேலத்தைச் சேர்ந்த பூபாலன், சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட கிடுக்கிபிடி விசாரணையில் இந்த திருட்டுக்கு திட்டம் போட்டுக் கொடுத்தது மங்கலம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் என்பது தெரியவந்தது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான காவலர் ரவிச்சந்திரன், அதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார் என்றும் பலரிடம் அதற்காக கடன் வாங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்திலும் பிரச்சனைகள் எழவே, இந்தத் திருட்டுக்குத் திட்டம் போட்டுள்ளார்.

கருவூலத்தில் திருட முயற்சித்த இருவரும் அவருடைய உறவினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. காவலர் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவிட்டுள்ளார். தற்போது தலைமறைவாக இருக்கும் காவலர் ரவிச்சந்திரனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 


Advertisement
ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு...! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்
தங்கவளையலை திருடிய ஜாக்கெட் கொள்ளைகாரிகள்... திருச்செந்தூரிலிருந்து திண்டுக்கலுக்கு ஓட்டம்.!
ரஜினி மகள் - நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து.. நட்சத்திர காதல்களால் விரிசல்..!
6 பேரை பலி வாங்கிய ஆற்றுநீர்ச் சுழல்.. தேவை ஒரு எச்சரிக்கைப் பலகை.!
ரூ 5 லட்சத்துக்காக கட்டிய வேட்டியை இழந்த திருடர் ஜட்டியுடன் தப்பிய காட்சிகள்..! எடுத்தான் பாரு ஓட்டம்…!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதலமைச்சர் பெயரில் கார் பரிசு.!
தண்டவாளத்தில் ‘குடி’ : ரெயில்வே போலீசாரிடம் வம்பிழுத்த இளைஞர்கள்... துப்பாக்கியுடன் போலீஸ் கெஞ்சல்
ஊரடங்கு வசூல் ராஜாக்கள்... கதறும் ரெயில் பயணிகள்... 10 மடங்கு கூடுதல் கட்டணம்
வீடுகளில் வருகிறது, மின்சார வாகனங்களுக்கான பொது சார்ஜிங் மையம்
இளவட்டக் கல் தூக்கும் போட்டி... பெண்களும் கல் தூக்கி சாதனை

Advertisement
Posted Jan 19, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு...! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்

Posted Jan 19, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தங்கவளையலை திருடிய ஜாக்கெட் கொள்ளைகாரிகள்... திருச்செந்தூரிலிருந்து திண்டுக்கலுக்கு ஓட்டம்.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரஜினி மகள் - நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து.. நட்சத்திர காதல்களால் விரிசல்..!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

6 பேரை பலி வாங்கிய ஆற்றுநீர்ச் சுழல்.. தேவை ஒரு எச்சரிக்கைப் பலகை.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ 5 லட்சத்துக்காக கட்டிய வேட்டியை இழந்த திருடர் ஜட்டியுடன் தப்பிய காட்சிகள்..! எடுத்தான் பாரு ஓட்டம்…!


Advertisement