செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு... வெள்ளத்தில் விழுந்த ஹல்க் ..!

Nov 28, 2021 08:38:08 AM

கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தின் வறட்சி பகுதியான சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வழிவதால் அந்த வெள்ள நீரில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உற்சாக ஆட்டம் போட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியான பகுதியாக அரியப்பட்ட சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதி கனமழையால் தண்ணீர் பூமியாகி காட்சி அளிக்கின்றது.

இங்குள்ள நெடுங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றது. இந்த வெள்ள நீரானது அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நெடுங்குளம் பகுதியில் சாலையை தாண்டி மறுகால் பாயும் காட்டாற்று வெள்ளத்தில் இறங்கி உற்சாக ஆட்டம் போட்டனர்

கோடையில் தண்ணீருக்கு அல்லாடும் தங்கள் பகுதியை தேடி ஆறே வந்திருக்கும் மகிழ்ச்சியில் வெள்ள நீருக்குள் எந்த வித ஆச்சமும் மில்லாமல் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை தெளித்து குதுகலமடைந்தனர்

ஆண் பெண் வித்தியாசமின்றி கிராமத்து சகோதரத்துவத்துடன் ஆனந்த நீராடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் . அப்போது பார்ப்பதற்கு சின்னவயசு ஹல்க் போல இருந்த இளைஞர் ஒருவர் காலால் தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டிருந்தார்

அப்போது அவர் வாரி இரைத்த நீர் ஒரு பெண் மீது பட, பட்டென்று திரும்பிய வேகத்தில் , அந்த ஸ்மால் ஹல்கை பிடித்து வேகமாக தள்ளியதில், பேஸ்மண்டு வீக்கான அந்த ஹல்க் தண்ணீரில் பொத்தென்று விழுந்தார்

ஆனால் அடுத்த நொடியே தான் யானை அல்ல குதிரை என்பது போல டக்கென்று எழுந்து, பொத்தென்று விழுந்தாலும் பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படவில்லை என்பதை போல சமாளித்தார் அந்த ஹல்க் பாய்..!

உற்சாக ஆட்டத்தை சில வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, சில பெண்கள் தங்கள் குழந்தைகளை கையில் பிடித்தபடி செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அங்கிருந்து செல்ல மனமில்லாத சிலர் அப்படியே வெள்ள நீரில் அமர்ந்துவிட்டனர்

நீரில் விளையாடுவது சிலருக்கு சந்தோசத்தை கொடுக்கலாம் ஆனால் இது போன்ற மழை வெள்ளத்தால் உருவாகக்கூடிய காட்டாற்றில் வருகின்ற நீரின் அளவு அதிகரித்து வேகம் கூடினால் வெள்ளத்தில் அடித்துச்செல்லும் விபரீதம் ஏற்படும் என்று எச்சரிக்கும் காவல்துறையினர் , இந்த காட்டாறு செல்லும் நீர்வழிபாதையில் சீமைகருவேலமரங்கள் அதிக அளவில் செறுத்து காணப்படுவதால் வெள்ளத்தில் சிக்கினால் உடலில் பலத்த காயம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் ஆபத்தை உணராமல் குதியாட்டம் போடும் மாணவ மாணவிகளின் விபரீத செயலை பெற்றோர்கள் கண்டிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.


Advertisement
ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு...! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்
தங்கவளையலை திருடிய ஜாக்கெட் கொள்ளைகாரிகள்... திருச்செந்தூரிலிருந்து திண்டுக்கலுக்கு ஓட்டம்.!
ரஜினி மகள் - நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து.. நட்சத்திர காதல்களால் விரிசல்..!
6 பேரை பலி வாங்கிய ஆற்றுநீர்ச் சுழல்.. தேவை ஒரு எச்சரிக்கைப் பலகை.!
ரூ 5 லட்சத்துக்காக கட்டிய வேட்டியை இழந்த திருடர் ஜட்டியுடன் தப்பிய காட்சிகள்..! எடுத்தான் பாரு ஓட்டம்…!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதலமைச்சர் பெயரில் கார் பரிசு.!
தண்டவாளத்தில் ‘குடி’ : ரெயில்வே போலீசாரிடம் வம்பிழுத்த இளைஞர்கள்... துப்பாக்கியுடன் போலீஸ் கெஞ்சல்
ஊரடங்கு வசூல் ராஜாக்கள்... கதறும் ரெயில் பயணிகள்... 10 மடங்கு கூடுதல் கட்டணம்
வீடுகளில் வருகிறது, மின்சார வாகனங்களுக்கான பொது சார்ஜிங் மையம்
இளவட்டக் கல் தூக்கும் போட்டி... பெண்களும் கல் தூக்கி சாதனை

Advertisement
Posted Jan 19, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

ஒரு ரசிகனாக சொல்கிறேன்.. தொலைத்த இடத்தில் வாழ்க்கையை தேடு...! தனுஷுக்கு எஸ்.ஏ.சி அட்வைஸ்

Posted Jan 19, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தங்கவளையலை திருடிய ஜாக்கெட் கொள்ளைகாரிகள்... திருச்செந்தூரிலிருந்து திண்டுக்கலுக்கு ஓட்டம்.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரஜினி மகள் - நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து.. நட்சத்திர காதல்களால் விரிசல்..!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

6 பேரை பலி வாங்கிய ஆற்றுநீர்ச் சுழல்.. தேவை ஒரு எச்சரிக்கைப் பலகை.!

Posted Jan 18, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ 5 லட்சத்துக்காக கட்டிய வேட்டியை இழந்த திருடர் ஜட்டியுடன் தப்பிய காட்சிகள்..! எடுத்தான் பாரு ஓட்டம்…!


Advertisement