செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மனைவியின் நடிப்புக்கு கணவர் இயக்குனர்... 'மோசடியில் இதுவும் ஒரு ரகம்'...!

Oct 28, 2021 07:36:15 AM

ஈரோட்டில், திருமணத்திற்கு பெண் பார்ப்பதாக கூறிய நண்பரிடம், கட்டிய மனைவியையே வரன் தேடும் பெண் போல பேச வைத்து, 12- லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜா தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நித்யா ஒரு மாற்றுத்திறனாளி. ராஜாவுடன் பணியாற்றி வரும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ஒருவர் திருமணத்துக்காக பெண் தேடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தனக்குத் தெரிந்த பெண் ஒருவர் உள்ளதாக கூறி, சமூக வலைத்தளத்தில் இருந்து ஒரு பெண்ணின் புகைப்படத்தை ராஜா அவருக்கு காண்பித்துள்ளார்.

திருமண ஆசையில் இருந்த ராஜாவின் நண்பர், புகைப்படத்தைப் பார்த்ததும் திருமணத்துக்கு ஒப்புக்கொள்வதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து, ராஜா தன் மனைவி நித்யாவை அந்த பெண் போல நண்பரிடம் பேச வைத்து உள்ளார். தனது பெயரை மாற்றிப் பேசிய நித்யா, தான் ஒரு மருத்துவ கல்லூரி மாணவி என்றும் கூறி உள்ளார். சில நாட்கள் போனிலேயே அவரை பேசி மயக்கிய நித்யா, படிப்புச் செலவுக்குப் பணம் வேண்டும் என்று கூறியுள்ளார்.

மருத்துவப் படிப்புக்கு லட்சங்களில் செலவாகும் என நித்யா கூறியதை நம்பி, தன்னிடமிருந்த 8 லட்ச ரூபாயோடு, ஈரோட்டைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடமிருந்து 4 லட்ச ரூபாய் வரை வாங்கி நித்யா குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார் ராஜாவின் நண்பர். ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த அவர், நித்யாவை நேரில் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதை ஏற்கனவே எதிர்பார்த்து இருந்த நித்யா, அதன் பிறகு தனது மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த ராஜாவின் நண்பர், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் இது பற்றி புகார் அளித்தார். அவர்கள் ராஜாவைப் பிடித்து விசாரித்தபோதுதான் அவரது மனைவியை வைத்தே போனில் பேசவைத்து மோசடி செய்தது தெரியவந்தது. நித்யா முன் ஜாமீன் பெற்ற நிலையில், ராஜாவை போலீசார் கைது செய்தனர்.


Advertisement
செங்கல்பட்டில் அரசுப்பள்ளி ஆசிரியை சொடக்கு மேல சொடக்கு போடுது பாடலின் நடன அசைவுகள் மூலம் தமிழ் எழுத்துகளை மாணவர்களுக்கு கற்பிக்கும் வீடியோ வைரல்.!
காஞ்சிபுரத்தில் தனி நபரால் குளம் மூடப்பட்டு ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்ட வருவாய் துறையினர்..!
சொத்துகளை எழுதிக் கேட்டு மகன் உணவளிக்க மறுப்பு.. பட்டினி கிடந்த மூதாட்டி ஆட்சியரிடம் புகார்..! 
ராணிப்பேட்டையில் நகராட்சி பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.. கணக்கில் வராத 170 சவரன் தங்க நகைகள், 23 லட்ச ரூபாய் பறிமுதல்!
தாக்கப்பட்ட போலீசார்.. தகர்க்கப்பட்ட கைவிலங்கு.. தப்பிக்கவைக்கப்பட்ட கைதி!
அம்பேத்கர் பிறந்த ஊரில் முதன்முதலில் அவருக்கு நினைவிடம் கட்டியது பாஜக தான் - அண்ணாமலை
திண்டுக்கல்லில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்.!
தஞ்சாவூரில் கழிவறைக்குள் பெண் சிசு சடலமாக கண்டெடுப்பு.. பெற்ற தாயே குழந்தையை பிளஷ் டேங்கில் அமுக்கி கொலை செய்த அதிர்ச்சி தகவல் விசாரணையில் அம்பலம்..!
கொரோனா உயிர்கொல்லி நோயல்ல எனக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.!
தஞ்சாவூரில் கடன் பிரச்சனை எனக் கூறி 11 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, பெற்றோரும் தற்கொலை..!

Advertisement
Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,சற்றுமுன்,Big Stories,

தாக்கப்பட்ட போலீசார்.. தகர்க்கப்பட்ட கைவிலங்கு.. தப்பிக்கவைக்கப்பட்ட கைதி!

Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பெண் சிசு கொலை, கொடூரத் தாய் கைது... தகாத உறவால் நேர்ந்த கொலை!

Posted Dec 06, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

விபத்தில் சிக்கியவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை: மருத்துவருக்கு டீன் பாராட்டு!

Posted Dec 05, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அலட்சிய அரசு ஓட்டுநரின் தவறால், கடும் நெரிசலில் சிக்கிய வாகனங்கள்..!

Posted Dec 05, 2021 in தமிழ்நாடு,Big Stories,

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் வீதியில் தர்ணா ; மாமியார் வீட்டில் சாதியை சொல்லி இழிவுபடுத்துவதாக வேதனை


Advertisement