செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கபடி விளையாடிய காதல் மருத்துவர்... கையும் களவுமாக கைது..! வீடியோ வெளியானது..!

Oct 26, 2021 01:55:46 PM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்தப் பெண் ஊழியருடன் காதல் சடுகுடு விளையாடிய மருத்துவர் கைது செய்யப்பட்டார். அத்துமீறலில் ஈடுபட, மற்றொரு பெண்ணை வாசலில் காவலுக்குப் போட்ட, மன்மத மருத்துவர் மாட்டிக் கொண்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியை மறந்து குறுக்க மறுக்க, காதல் சடுகுடு விளையாடி சிக்கிக் கொண்ட மன்மத மருத்துவர் குருசாமி இவர்தான்..!

இளையரசனேந்தலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருவத்துவராக பணியாற்றி வரும் 51 வயதான் குருசாமி, ஸ்ரீ முத்தையா கிளினிக் என்ற பெயரிலும் தனியாக மருத்துவமனை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிகப் பணியாளராக பணியாற்றும் தூய்மைப் பணியாளர் ஒருவரிடம் பணிநேரத்தில் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகின்றது.

இதுபோன்ற நேரங்களில், சிகிச்சை பெற வரக்கூடிய நோயாளிகள் அறைக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அதே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்று வரும் நீலவேணி என்பவரை வாசலுக்கு வெளியில் பாதுகாப்புக்கு நிற்க வைத்ததாகவும் புகார் எழுந்தது.

இந்த நிலையில் பணி நேரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிகப் பணியாளருடன் மருத்துவர் குருசாமி செய்த காதல் சேட்டைகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பாதுகாப்புக்கு நிற்கவைக்கப்பட்ட ஒப்பந்த பணியாளர் நீலவேணி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் மருத்துவர் குருசாமி மீது புகார் அளித்தார்.

அதில், மருத்துவரும், தற்காலிக பணியாளராக பணியாற்றும் தூய்மை பணியாளரும் தனிமையில் இருப்பதை தான் பார்த்து விட்டதால், தன்னை பழிவாங்கும் விதமாக தினந்தோறும் இருவரும் உள்ளே சென்றதும், அறைக்குள் யாரும் செல்லாமல் தடுக்கும் வகையில் தன்னைப் பாதுகாவலுக்கு நிறுத்தி வைத்து மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்திருந்தார்

அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவை, தான் எடுத்துவிட்டதாகக் கூறி தனது செல்போனையும் பறித்து வைத்துக் கொண்டதாகவும், தனக்கு விடுமுறை கூட கொடுக்காமல் வேண்டுமென்றே பல்வேறு வகையில் துன்புறுத்தி வருவதாகவும், தான் அடிபணிய மறுப்பதால் தன்னை அவதிக்குள்ளாக்கி வருவதாக அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.

பணி நேரத்தில் மருத்துவப் பணியாளர்கள் இருந்தாலும், அவர்கள் அருகே உறங்குவது என பல இன்னல்களை மன்மத மருத்துவர் குருசாமி கொடுத்து வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீலவேணியின் புகாரை பெற்று கொண்ட போலீசார் ஆபாசமான வார்த்தையினால் அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல், செல்போன் காணாமல் போனது, பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மருத்துவர் குருசாமியை கைது செய்தனர்.

ஊருக்கே தெரியாமல், உள்ளுக்குள் கபடி விளையாடிய மருத்துவரை அந்த வீடியோ காட்சிகள், கண்ணியில் சிக்கிய காண்டாமிருகமாய் தவிக்க விட்ட நிலையில் தற்போது கமுக்கமாக ஜெயிலில் கம்பி எண்ணி வருகின்றார் மருத்துவர் குருசாமி..!


Advertisement
வெள்ளத்துக்கே டஃப் கொடுத்த திருமாவளவன்... அண்ணன் சேர்லயே போவாருடா.!
அருவிபோல் ஊற்றும் தண்ணீரும்... நிரம்பாத அதிசயக் கிணறும் : வியக்கும் மக்கள்
25 ஆண்டு கால குடும்ப நண்பர்.. வில்லனான பின்னணி.!
மன்மதராசா நடன இயக்குனர் கொரோனாவுக்கு பலி..!
"துடைக்கும்போது" வெடித்த துப்பாக்கி ? தோள்பட்டையில் பாய்ந்த குண்டு
கண்ணை கட்டி கராத்தே பயிற்சியில் பாலியல் சேட்டை..! பள்ளி தாளாளர் கைது
ஓடி ஓடி பிடிக்கனும் துள்ளிய கெண்டையை பாய்ந்து பிடித்த கில்லி..! மீனுக்கு ஜாமீன் கிடைக்கல
"ஆன்லைன் ரம்மியில்" பறிபோன பல லட்சம்.! "கருவூலத்திலேயே" கைவைக்க முயன்ற காவலர்
லாரி கடத்தல், Ex மந்திரி மகன் முந்திரி திருடனானான்..! சினிமா பாணியில் பரபர சேசிங்.!
பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு... வெள்ளத்தில் விழுந்த ஹல்க் ..!

Advertisement
Posted Nov 29, 2021 in சென்னை,Big Stories,

வெள்ளத்துக்கே டஃப் கொடுத்த திருமாவளவன்... அண்ணன் சேர்லயே போவாருடா.!

Posted Nov 29, 2021 in தமிழ்நாடு,Big Stories,

அருவிபோல் ஊற்றும் தண்ணீரும்... நிரம்பாத அதிசயக் கிணறும் : வியக்கும் மக்கள்

Posted Nov 29, 2021 in சென்னை,Big Stories,

25 ஆண்டு கால குடும்ப நண்பர்.. வில்லனான பின்னணி.!

Posted Nov 29, 2021 in சினிமா,Big Stories,

மன்மதராசா நடன இயக்குனர் கொரோனாவுக்கு பலி..!

Posted Nov 29, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

"துடைக்கும்போது" வெடித்த துப்பாக்கி ? தோள்பட்டையில் பாய்ந்த குண்டு


Advertisement