செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மோசடி வழக்கில் சிறையில் உள்ள கேஎஃப்ஜே உரிமையாளர்கள்... பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க போலீசார் அதிரடி முடிவு

Sep 27, 2021 08:11:43 AM

மோசடி வழக்கில் கேஎஃப்ஜே நகைக் கடை உரிமையாளர்கள் சிறையில் உள்ள நிலையில், அவர்களுக்கு சொந்தமான சென்னையில் உள்ள இரண்டு சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

சென்னை மயிலாப்பூர், அண்ணா நகர், புரசைவாக்கம், வளசரவாக்கம் ஆகிய இடங்களில் கே.எப்.ஜே எனப்படும் கேரளாவைத் தலைமையிடமாக கொண்டு கேரளா பேஷன் ஜுவல்லரி நகைக்கடை செயல்பட்டு வந்தது. இந்த நகைக்கடையின் மேலாண் இயக்குநராக சுஜித் செரியன், இயக்குநர்களாக அவரது மனைவி தான்யா, சகோதரர் சுனில் செரியன் ஆகியோர் இருந்தனர்.

சீட்டு நடத்துவதுபோல, இந்நிறுவனம் பல்வேறு பெயர்களில் தங்க நகைசேமிப்புத் திட்டங்களை அறிவித்தது. அதன்மூலம், பொதுமக்களிடம் இருந்து பழைய தங்க நகைகளையும், பணத்தையும் வாங்கிக் கொண்டது. ஆனால் திட்டத்தின் அடிப்படையில் நகைச்சீட்டு முதிர்வு தேதி முடிந்த பின்னரும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தையோ, தங்கத்தையோ திருப்பிக்கொடுக்கவில்லை. திட்டங்கள் முதிர்வடைந்த சிலருக்கு நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட காசோலைகளும் பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டன.

2019ஆம் ஆண்டு சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் கே.எப்.ஜே. ஜுவல்லரி மீது கொடுக்கப்பட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டன. பாதிக்கப்பட்ட ஆயிரத்து 638 பேர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி 26 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தது.

பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி கே.எப்.ஜே ஜுவல்லரி நிறுவனத்தின் பெயரிலும் நிர்வாக இயக்குனர் சுனில் செரியன் மற்றும் இயக்குனர் சுஜித் செரியன் மேலாளர் ஆகியோர் மீது தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் , கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து தொழிலில் திடீரென நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்றும் சொத்துகளை விற்று பணத்தை திருப்பிக் கொடுப்பதாக கே.எப்.ஜே நிர்வாகிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக எழுத்து பூர்வமாகவும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் கேஎஃப் ஜே நிர்வாகிகள் எழுதிக் கொடுத்தனர்.

8 மாதம் ஆகியும் எழுதிக் கொடுத்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பிக் கொடுக்காததால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கே எஃப் ஜே நிர்வாகிகள் சுனில் செரியன் மற்றும் சகோதரர் சுஜித் செரியன் ஆகிய இருவரையும் கைது செய்து சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சுனில் செரியன் மற்றும் சுஜித் செரியன் ஆகிய இருவரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். நகை திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பணம் மீண்டும் தொழிலுக்கு பயன்படுத்தப் பட்டதாகவும், ஒரே நேரத்தில் அனைத்து முதலீட்டாளர்களும் பணத்தை கேட்டதால் கேரளா பேஷன் ஜுவல்லரி நஷ்டத்திற்கு சென்றது என்றும் மனுவில் தெரிவித்திருந்தனர்.

எனவே, பணத்தை உடனடியாக அனைவருக்கும் செலுத்த முடியவில்லை என்று கூறி, தங்களிடம் உள்ள சொத்துக்களை விற்று பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க உள்ளதாக தெரிவித்தனர். இருப்பினும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கில் சாட்சிகளை கலைக்க நேரிடும் என்ற அடிப்படையில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சிறப்பு நீதிமன்றம் கேரளா பேஷன் ஜுவல்லரி நிர்வாகிகள் சுனில் செரியன் மற்றும் சுஜித் செரியன் ஆகியோருக்கு ஜாமீன் தர மறுத்தது.

இந்நிலையில், கே.எஃப்.ஜே நிர்வாகிகளுக்குச் சொந்தமாக சென்னையில் உள்ள இரண்டு சொகுசு பங்களாக்களை பறிமுதல் செய்ய உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அவற்றின் தற்கால மதிப்பீட்டை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட ஆயிரத்து 638 பேருக்கு அளிக்க வேண்டிய 106 கோடி ரூபாயை திரும்ப செலுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் மேலாளரையும் தேடி வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement
முல்லை பெரியாறு அணையை முடக்க மலையாள நடிகர்கள் சதி..! தமிழ் நடிகர்கள் மவுனம் களையுமா ?
ரவுடியின் குடும்பத்தை அலறவிட்ட போலீசார்... வீடு புகுந்து சோதனை.... கை கால்களை உடைப்பதாக கதறல்.!
வன்கொடுமை செய்து பெண் கொலை... தூண்டிலால் சிக்கிய திமிங்கலங்கள்
ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயன்ற கும்பல்... மென்பொறியாளரை கடத்தி மிரட்டல்
வன்கொடுமை செய்து பெண் கொலை..! தூண்டிலால் சிக்கிய திமிங்கலங்கள்..!
மாற்றான் தோட்டத்தில் புகுந்த பேராசிரியரை நையப்புடைத்த கணவர்..! மனைவி இல்லன்னா மரணம் தான்!
யூடியூப்பை பார்த்து கள்ள நோட்டு அச்சடித்த கும்பல்..! ஜெராக்ஸ் போட்டு சிக்கியது!
கபடி விளையாடிய காதல் மருத்துவர்... கையும் களவுமாக கைது..! வீடியோ வெளியானது..!
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்ற ஓ.பி.எஸ் கருத்துக்கு எதிர்ப்பு
பேருந்தில் குரங்குகள் போல தொங்கி விபரீத சாகசம் செய்யும் மாணவர்கள்.. ஆவேசமான ஓட்டுநர்..!

Advertisement
Posted Oct 27, 2021 in தமிழ்நாடு,இந்தியா,வீடியோ,Big Stories,

முல்லை பெரியாறு அணையை முடக்க மலையாள நடிகர்கள் சதி..! தமிழ் நடிகர்கள் மவுனம் களையுமா ?

Posted Oct 27, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடியின் குடும்பத்தை அலறவிட்ட போலீசார்... வீடு புகுந்து சோதனை.... கை கால்களை உடைப்பதாக கதறல்.!

Posted Oct 27, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வன்கொடுமை செய்து பெண் கொலை... தூண்டிலால் சிக்கிய திமிங்கலங்கள்

Posted Oct 26, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயன்ற கும்பல்... மென்பொறியாளரை கடத்தி மிரட்டல்

Posted Oct 26, 2021 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

வன்கொடுமை செய்து பெண் கொலை..! தூண்டிலால் சிக்கிய திமிங்கலங்கள்..!


Advertisement