தமிழகம் முழுவதும் 16,250 ஹெக்டேர் அளவிலான வனப்பரப்பு ஆக்கிரமிப்பில் இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் வனப்பரப்பை ஆக்கிரமித்து விதிகளை மீறி ரிசார்ட் கட்டப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, வன ஆக்கிரமிப்பு மீட்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்த பிறகும் கூட தமிழகத்தில்16 ஆயிரம் ஹெக்டேக் அளவிலான வனம் ஆக்கிரமிப்பில் உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தனர்.
மேலும், மனித குலத்திற்கு பயனளிக்கும் வனத்தை பாதுகாப்பது அவசியம் என வலியுறுத்திய நீதிபதிகள், வனப்பகுதி ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையை தொடரும்படி அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர்.