செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தற்கொலை நாடகமாடிய மனைவி அச்சத்தில் போலீஸ் ஏட்டு தற்கொலை குடும்பத்தைக் கெடுத்த "குடி"

Jul 26, 2021 07:23:44 AM

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் குடும்பத் தகராறில் தற்கொலை செய்துகொள்வதாக அறைக்குள் சென்ற மனைவியும் மகள்களும் நீண்ட நேரம் கதவைத் திறக்காததால் அவர்கள் இறந்துவிட்டதாகக் கருதி தலைமைக் காவலர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

வேடசந்தூர் கோகுல் நகரைச் சேர்ந்த ரத்தினகிரி என்பவர், சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.  ரத்தினகிரிக்கு நாகஜோதி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உண்டு.

மதுவுக்கு அடிமையான ரத்தினகிரி, நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவி நாகஜோதியிடம் தகராறில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையான நாகஜோதிக்கு கணவரின் நடவடிக்கைகள் வெறுத்துப் போக, என்றைக்காவது ஒருநாள் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் பார் என மிரட்டி வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவும் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த ரத்தினகிரி, மனைவியை அடித்து உதைத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்கொலை செய்துகொள்வதாகக் கூறிவிட்டு நாகஜோதி, தனது அறைக்குச் செல்ல, அவருடன் இரண்டு மகளும் சென்று கதவை உட்பக்கமாக தாழிட்டுக் கொண்டுள்ளனர்.

முதலில் அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்ற ரத்தினகிரி, அதிகாலை 3 மணியளவில் திடீரென சந்தேகம் வந்தவராக, மனைவியின் அறைக்கதவை சென்று தட்டி இருக்கிறார்.

கணவர் மீண்டும் சண்டை போடத்தான் கதவைத் தட்டுகிறார் என எண்ணி நாகஜோதியும் மகள்களும் கதவைத் திறக்காமல் அமைதியாக இருந்துள்ளனர். இதனால் உண்மையிலேயே அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக எண்ணி பயந்துபோன ரத்தினகிரி, தனது அறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லப்படுகிறது.

நீண்ட நேரமாக கேட்ட கதவு தட்டும் சப்தம் நின்று போகவே, கணவர் தூங்கி இருப்பார் என நாகஜோதியும் நினைத்துவிட்டார். காலை கணவரின் அறைக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததைக் கண்டு இந்த முறை நாகஜோதிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

கணவரின் அறைக்கதவை திறக்க முயன்று அது திறக்காததால் உறவினரை அழைத்து வந்து திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்தினகிரியின் உடல் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. 

மருத்துவம் படித்து வரும் மூத்த மகளும், 12ஆம் வகுப்பு படித்து வரும் இளைய மகளும் தந்தையின் எதிர்பாராத இந்த விபரீத முடிவைக் கண்டு கவலையிலும் கண்ணீரிலும் ஆழ்ந்துள்ளனர்.


Advertisement
5 அழுகிய சடலங்களுடன்... 4 நாட்கள் தவித்த சிறுமி..! ஆத்திரத்தால் அழிந்த குடும்பம்.!
நான் "அவள்" இல்லை "அவன்"..! கொலையில் முடிந்த முறையற்ற காதல்..!
குளிப்பதை படமெடுத்து மிரட்டல்... நகை, பணம் பறிப்பு... கம்பி எண்ணும் வக்கிரன்
சூடுவைத்து சித்ரவதை... 5 வயது சிறுவனை கொன்ற கொடூர பெண்
அடேய் ரஸ்கிற்கு எல்லாம் ரிஸ்க் எடுக்க முடியாது..! வடக்கன்ஸ் வம்பால் பேக்டரிக்கு பூட்டு
தொட்டா உதிருதா..? எம். சாண்டுல சிமெண்ட கலக்க மறந்துட்டாங்க..! ஆட்டம் காணும் ஆஸ்பத்திரி கட்டடம்
பெண்ணுக்கு கொடுமை.. குடிகார கணவன் எஸ்கேப்..! சிறுமிகள் எடுத்த வீடியோவால் எப்.ஐ.ஆர்
வாக்கிங்போன புது மாப்பிள்ளை.. கார் மோதி உயிரிழந்த சம்பவம்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
ஊனம் ஒரு தடையல்ல: இரு கால்களை இழந்தாலும் சிகரம் தொட்ட சிங்கப் பெண்
காவு கொண்ட சுரங்கப்பாதை: குளம்போல தேங்கிய மழை நீர், கார் மூழ்கி பெண் மருத்துவர் பலி

Advertisement
Posted Sep 19, 2021 in இந்தியா,வீடியோ,Big Stories,

5 அழுகிய சடலங்களுடன்... 4 நாட்கள் தவித்த சிறுமி..! ஆத்திரத்தால் அழிந்த குடும்பம்.!

Posted Sep 19, 2021 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

நான் "அவள்" இல்லை "அவன்"..! கொலையில் முடிந்த முறையற்ற காதல்..!

Posted Sep 19, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குளிப்பதை படமெடுத்து மிரட்டல்... நகை, பணம் பறிப்பு... கம்பி எண்ணும் வக்கிரன்

Posted Sep 19, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

சூடுவைத்து சித்ரவதை... 5 வயது சிறுவனை கொன்ற கொடூர பெண்

Posted Sep 19, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அடேய் ரஸ்கிற்கு எல்லாம் ரிஸ்க் எடுக்க முடியாது..! வடக்கன்ஸ் வம்பால் பேக்டரிக்கு பூட்டு


Advertisement