செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

11 நிமிடத்திற்குள் சைக்கிளை பிரித்து மாட்டும் பொடியன்...! நான்கரை வயது சாதனை

Jul 25, 2021 07:41:24 AM

சென்னை பெரம்பூரை சேர்ந்த நான்கரை வயது சிறுவன் ஒருவன், கழற்றி பிரித்து போடப்பட்ட சைக்கிளை  11 நிமிடத்திற்குள் பழையபடி மாட்டி அசத்தி வருகிறார். தாயாரின் உற்சாகக் குரலால் சாதனையை எட்டிப்பிடித்த சிறுவனின் திறமை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கழற்றி போடப்பட்ட சைக்கிளை மாட்டுவதற்கு தயாராய் நிற்கும் இந்த சிறுவன் நான்கரை வயதேயான சாய்ஹிசாந்த்..!

சென்னை பெரம்பூரை சேர்ந்த வைரபிரகாஷ் முருகவேல், பவித்ரா தம்பதியரின் மகனான சிறுவன் சாய்ஹிசாந்த் சிறுவதில் இருந்தே துரு துருவென இருந்ததால், ஏதாவது சாதனைக்கு தயார்படுத்த வேண்டும் என்ற ஆசையில், சிறுவனின் தாயார் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு தற்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது.

தமது தாயார் ஸ்டார்ட் சொன்னதும் கழற்றிபோடப்பட்டிருந்த சைக்கிளை, விறுவிறுவென ஹாண்டில் பார், வீல் என ஒவ்வொன்றாக எடுத்து மாட்டினான் சிறுவன் சாய்ஹிசாந்த். பேனா பிடித்து தெளிவாக எழுத சிரமப்படும் சிறுவயதில் கையில் ஸ்பேனர் பிடித்து லாவகமாக சைக்கிள் பாகங்களில் நட்டுகளை மாட்டினான்.

தாயாரின் உற்சாகக்குரலால் சோர்வடையாமல் அதே நேரத்தில் நிதானத்துடன் சைக்கிள் பாகங்களை எடுத்து மாட்டிய சிறுவனுக்கு சிறிய சிறிய உதவிகளை அருகில் இருந்து ஒருவர் செய்தாலும் முழுவதும் தனது பங்களிப்பாக இருக்க வேண்டும் என்பதில் சிறுவன் சாய்ஹிசாந்த் தெளிவாக இருந்தான்...

சைக்கிளில் பின்பக்க சக்கரத்தை பெடலுடன் தொங்கிக் கொண்டிருந்த செயினில் கன கச்சிதமாக பொறுத்திய சிறுவன், ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொண்ட நேரம் 10 நிமிடம் 59 வினாடி மட்டுமே..! சிறுவனின் இந்த சாதனையை கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது.

குத்துச்சண்டை, நீச்சல் மற்றும் ஸ்கேட்டிங்கிலும் ஆர்வம் செலுத்திவரும் சிறுவன் சாய் ஹிசாந்தின் இந்த சாதனைக்கு அவரது தாயார் பவித்ரா ஒரு மணி நேரம் மட்டுமே பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளால் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை சிறுவயதிலேயே மனதில் விதைத்து விட்டால் போதும், அந்த குழந்தை வளர வளர ஒவ்வொரு நிலையிலும், தடம் மாறாமல் படிப்பிலும் விளையாட்டிலும் தன்னை சாதனையாளனாக நிலை நிறுத்திக் கொள்ள உதவும்..! 


Advertisement
மோசடி வழக்கில் சிறையில் உள்ள கேஎஃப்ஜே உரிமையாளர்கள்... பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க போலீசார் அதிரடி முடிவு
சாவு மணி அடிக்கும் சாயக் கழிவுகள்.. கழிவுநீராக மாறும் காவிரி நீர்..! கடும் நடவடிக்கை தேவை
அரசியல் பிரமுகருக்காக தலைவெட்டி கொலை..! திண்டுக்கல் திகில்
ஜோடி போட்டு ஸ்மியூல் பாட்டு பாடி சூடு பட்ட குயில்கள்... சாட்டிங்கிலிலும் சீட்டிங்.!
நள்ளிரவில் செல்போனில் ரகசிய பேச்சு... தட்டிக்கேட்ட கணவனுக்கு கத்திக்குத்து... காதல் மனைவி அட்டகாசம் !
மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்: போலீசாரை ஏமாற்ற புரூடா வீடியோ?
ஆன்லைன் விளையாட்டு விபரீதம்.. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை..!
ஸ்கூட்டியில் பெட்ரோல் இருக்கிறதா இல்லையான்னு இப்படியாப்பா பார்க்கிறது..? குபீர்..டமால்...குப்..!
மாஸ் ஹீரோவுக்கு இணையாக கீர்த்திக்கு கூடிய ரசிகர் கூட்டம் ..! கொரோனா போயே போச்சு.!
ஜோதிகா படத்தால் போக்சோ குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை..! பொன்மகள் புகாரில் நடவடிக்கை

Advertisement
Posted Sep 27, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

மோசடி வழக்கில் சிறையில் உள்ள கேஎஃப்ஜே உரிமையாளர்கள்... பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க போலீசார் அதிரடி முடிவு

Posted Sep 26, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாவு மணி அடிக்கும் சாயக் கழிவுகள்.. கழிவுநீராக மாறும் காவிரி நீர்..! கடும் நடவடிக்கை தேவை

Posted Sep 26, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அரசியல் பிரமுகருக்காக தலைவெட்டி கொலை..! திண்டுக்கல் திகில்

Posted Sep 26, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜோடி போட்டு ஸ்மியூல் பாட்டு பாடி சூடு பட்ட குயில்கள்... சாட்டிங்கிலிலும் சீட்டிங்.!

Posted Sep 26, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நள்ளிரவில் செல்போனில் ரகசிய பேச்சு... தட்டிக்கேட்ட கணவனுக்கு கத்திக்குத்து... காதல் மனைவி அட்டகாசம் !


Advertisement