செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

உணவுப் பொருள் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி ?

Jul 20, 2021 02:15:04 PM

உணவுப் பொருட்களில் உள்ள கலப்படங்களை கண்டறிய தனித்தனி வழிமுறைகள் உள்ளன. 

சென்னை எழும்பூரில் சாலையோர உணவு வியாபாரிகளுக்கான உணவுப் பாதுகாப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உணவுப் பாதுகாப்பு நிபுணர் பசுபதி, உணவுப் பாதுகாப்பு குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 25 கோடி மக்கள், சாலையோர கடைகளில் ஒரு வேளையாவது உணவை உட்கொள்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அத்தகைய சாலையோர உணவுகளைத் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்களில் பல கலப்படம் கொண்டவை என்பதை அறியாமல் அவற்றை வாங்கி வாடிக்கையாளர்களுக்கும் கொடுக்கின்றனர் என்கிறார் பசுபதி.

எனவே மூலப் பொருட்களை வாங்கும்போது, அவை தரமானவையா, தரமில்லாதவையா என்பதைக் கண்டறிய சில எளிமையான வழிமுறைகளையும் பசுபதி விளக்கினார்.நல்ல முட்டைகள் எது என்பதை கண்டறியும் வழிமுறைகளையும் அவர் எடுத்துரைத்தார்.

இதேபோல் மிளகு, மஞ்சள், மிளகாய்த்தூள், டீத்தூள், வெல்லம் உள்ளிட்டவற்றில் உள்ள கலப்படங்களையும் எவ்வாறு கண்டறியலாம் என்பதையும் பசுபதி எளிமையான வழிமுறைகளைக் கூறி விளக்கினார்.

ஒரு கண்ணாடி டம்ளர் தண்ணீரில், சிறிதளவு மிளகை போடும் போது, தூய மிளகு டம்ளரின் அடியில் தேங்கும் என்றும் பப்பாளி விதையாகவும், கலப்படமாகவும் இருந்தால் நீரின் மேல் பகுதியில் மிளகு மிதக்கும் என்கிறார் பசுபதி.

 எளிய மக்களுக்கான வரப்பிரசாதமாக இருக்கும் சாலையோர உணவகங்களில் தரமான உணவுகளை வழங்க வியாபாரிகள் முன்வர வேண்டும் என்றும் அதற்கு மூலப் பொருட்களை வாங்கும்போது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும் உணவுப் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

 

 

 


Advertisement
இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார்
இங்கிலாந்து, போர்ச்சுக்கல், அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் குரங்கம்மை பாதிப்பு
மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து இந்தியாவில் அறிமுகம்.. சிகிச்சை காலத்தை 90 சதவீதம் வரை குறைக்கும் PHESGO என்ற மருந்து..!
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்?
ஒமைக்ரானுக்கு எதிராக மொல்னுபிரவர் வாய்வழி மருந்து செயலாற்றும் - மெர்க் மருந்து நிறுவனம் தகவல்
வூகான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த நியோ கோவ் வைரஸின் வீரியம் குறித்து ஆராய்ச்சிக்கு பின்னர் தெரிய வரும் - உலக சுகாதார அமைப்பு
'தரமற்ற அப்பளத்தால் புற்றுநோய் ஆபத்து..?' நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளங்களை ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவு
ஏற்கனவே செலுத்தியுள்ள தடுப்பூசியை தான் பூஸ்டர் டோசாக செலுத்த வேண்டும், வேறுவகை தடுப்பூசியை செலுத்தக்கூடாது - மத்திய அரசு அறிவுறுத்தல்
ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மாத்திரைகளை அவசரகால சிகிச்சைக்கு பயன்படுத்த தென்கொரியாவில் ஒப்புதல்

Advertisement
Posted Aug 18, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு...! மாடலுடன் டுகாட்டி காதலன் டூயட்டு..! ஆட்டம் போட்டவனுக்கு போலீஸ் ஆப்பு

Posted Aug 18, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெட்டி இங்கே.. தங்கம் எங்கே..? ஊர் குருவி கள்ள பருந்தானது..! கண்ணாமூச்சி ரே.. கண்டுபிடி யாரே..!

Posted Aug 17, 2022 in சென்னை,Big Stories,

சென்னை நிதிநிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை.. கத்திமுனையில் கைவரிசை..!

Posted Aug 17, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கஞ்சா குடிக்கி இளசுகள் ஓட்டலில் அட்டகாசம்.. கொலை வெறி தாக்குதல்..! இதற்கு என்ன தான் தீர்வு..?

Posted Aug 16, 2022 in சென்னை,Big Stories,

15 நிமிடங்களில் 32 கிலோ நகைகளை திருடியது எப்படி? முக்கிய கொள்ளையன் பரபரப்பு தகவல்..!


Advertisement