செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

கடைசி நேரத்தில் காலை வாரிய புரோகிதர்.... திருமண வீட்டாருக்கு கைகொடுத்த டெக்னாலஜி..!

May 05, 2021 11:49:46 PM

தெலுங்கானா அருகே, புரோகிதர் வீடியோ காலில் மந்திரம் ஓத மணமக்கள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

உற்றார், உறவினர் புடைசூழ, நடைப்பெற்று கொண்டிருந்த திருமணங்கள் கொரோனா தொற்று காரணமாக , நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து, காதோடு காதோடு வைத்தார் போல நடைப்பெற்று வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானாவில் வித்தியாசமான முறையில் ஒரு திருமணம் நடைப்பெற்றுள்ளது,.

தெலுங்கானவில், மெதக் மாவட்டத்தில் உள்ள சோமாலி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராம். இவரது மகள் மஞ்சுளா. இவருக்கும் அதேப்பகுதியில் உள்ள பீமலா கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவருக்கும், பீமாலாவில் உள்ள மணமகனின் வீட்டில் திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தனர்,.

கொரோனா பரவல் காரணமாக, பல திருமணங்கள் தள்ளிப்போகின்றது. ஆனால் அதனை விரும்பாத இவர்கள், குறிப்பிட்ட முகூர்தத்தில் திருமணத்தை நடத்தியே ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்தனர்,.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பீமலா கிராமத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்,. இதனை கேள்விப்பட்டு திருமணத்தை நடத்தி வைக்க ஒப்பு கொண்டிருந்த புரோகிதர் பதறிப்போனார். மேலும் கொரோனாவிற்கு பயந்து பீமலா கிராமத்திற்கு வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது,.

வர வேண்டிய புரோகிதர், LAST MINUTE இல் காலை வாரியதால் திருமண வீட்டார் செய்வதறியாது திகைத்தனர்,.

இந்த நிலையில் மூகூர்த்த நேரம் முடிய போவதால் சட்டுபுட்டென்று கூடி பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்,. அதன்படி புரோகிதருக்கு டெக்னாலஜிஸ் அத்துப்படி என்பதால், வீடியோ காலில் மந்திர ஓதி திருமணத்தை நடத்த ஒப்புக்கொண்டார்,.

தனது வீட்டில் அமர்ந்தபடி , புரோகிதர் வீடியோ காலில் மந்திரம் ஓத மஞ்சுளா,மோகனின் திருமணம் சிறப்பாக நடைப்பெற்றது. தற்போது இந்த திருமணம் குறித்தான செய்தி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement
கல்வி, வேலைக்காக வெளிநாடு செல்லும் பயணிகள் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது டோசை 28 நாட்களுக்கு பிறகு போடலாம் - மத்திய சுகாதார அமைச்சகம்
உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அமல்
பட்டப் பகலில் கடைக்காரரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சித்த இளைஞர்-பரபரப்பு சிசிடிவி காட்சி
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 60 ஆயிரமாகக் குறைந்தது
பாலியல் புகாரில் சிக்கியுள்ள சிவசங்கர்பாபா தலைமறைவு - டேராடூன் விரைந்தது சிபிசிஐடி
மகாராஷ்டிராவில் கொரோனாவை செயலிழக்க செய்யும் திறன் கொண்ட புதுவகை முக கவசம் தயாரிப்பு
கேரளாவில் காணப்படும் அபூர்வ இனமான பன்றிமூக்குத் தவளை
திருப்பதி மலைப்பாதையில் 20 மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டம்.
பீகாரில் கால் மற்றும் முதுகு எலும்பு முறிவால் அவதிப்படும் தாய்... மருத்துவமனைக்கு 4 கிலோ மீட்டர் தூரம் முதுகில் சுமந்து செல்லும் மகள்
மேற்கு வங்கத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

Advertisement
Posted Jun 15, 2021 in செய்திகள்,Big Stories,

வெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..!

Posted Jun 15, 2021 in இந்தியா,வீடியோ,Big Stories,

130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி சிங்கம்..! சாமர்த்தியம் காப்பாற்றியது

Posted Jun 15, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

காதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..! ரூ 700 கோடி சொத்து இருக்குதாம்..!

Posted Jun 15, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

அண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..! சர்க்கஸ் சாகச புள்ளீங்கோஸ்

Posted Jun 15, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..! போலீசுக்கு புது தலைவலி


Advertisement