செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

தமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...

May 05, 2021 09:23:01 PM

மிழ்நாட்டில், ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, முதன்முறையாக 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் வகைதொகையின்றி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 23,310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 20,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், இணைநோய் இல்லாத 34 பேர் உட்பட 167 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 58 பேர், செங்கல்பட்டில் 16 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். நீரிழிவு போன்ற இணை நோய் உள்ள, 133 பேர் பெருந்தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அண்மை நாட்களில் இதுவே அதிகமான கொரோனா உயிரிழப்பாகும். மேற்குவங்கத்திலிருந்து வந்த 8 பேர், பீகாரிலிருந்து வந்த 5 பேர் உட்பட வெளிமாநிலங்களிலிருந்து வந்த 22 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை பெருநகரில், மேலும் 6291 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2029 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1755 பேருக்கும், புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 1385 பேருக்கும், மதுரையில் 914 பேருக்கும், தூத்துக்குடியில் 741 பேருக்கும், திருநெல்வேலியில் 653 பேருக்கும், ஈரோட்டில் 616 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 541 பேருக்கும், கன்னியாகுமரியில் 524 பேருக்கும், திருப்பூரில் 640 பேருக்கும், திருச்சியில் 652 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில், 12 வயதுக்குட்பட்ட 796 சிறுவர், சிறுமிகள் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஆளாகியுள்ளனர். சுகாதாரத்துறை அறிக்கையின்படி, 1,25,230 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் பின்பற்றுமாறு, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறைக் கேட்டுக்கொண்டுள்ளது.


Advertisement
தமிழகத்தில் மேலும் 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
3 ஆம் அலையை எதிர்கொள்ள தயாராகிறது மத்திய அரசு..! நாடு முழுதும் 50 நவீன மாடுலார் மருத்துவமனைகளை அமைக்க திட்டம்
குழந்தைகளுக்கு கொரோனா தொற்று வராமல் காக்க வழிகாட்டுதல்... மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் வெளியீடு
தமிழகத்தில் 3 இடங்களில் 100 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை
தடுப்பூசிப் போட்டுக் கொண்ட பின்னர் உடலில் காந்தசக்தி பெற்ற ஆசிரியர்
ஜார்கண்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்ன? பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
4 நாட்கள் 2 குழந்தைகளை பூட்டி வைத்து விட்டு மது விருந்துக்கு சென்ற தாய்... பசியால் 11 மாத குழந்தை உயிரிழந்த சோகம்
கொரோனா ஊரடங்கின் 3 ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்தது டெல்லி அரசு
ஆன்லைன் மது விற்பனை: பரிசீலித்து விரைவில் முடிவு..! -டாஸ்மாக் நிறுவனம்

Advertisement
Posted Jun 14, 2021 in தமிழ்நாடு,Big Stories,

வங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..! மனைவியை கொன்று நாடகம்

Posted Jun 14, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாஃபிங் போட்டோவால் பாய்பிரண்ட் பிளாக் மெயில்.. உயிரை மாய்த்த மாணவி..! பணம் பறிக்கும் கும்பல் அட்டூழியம்

Posted Jun 14, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

ஆபாச யூடியூபர் தலைமறைவு.. சேனலை முடக்க நடவடிக்கை..!

Posted Jun 14, 2021 in இந்தியா,வீடியோ,Big Stories,

3 பேரைத் திருமணம் செய்து 'டாடா' காட்டிய கல்யாண ராணி

Posted Jun 13, 2021 in வீடியோ,Big Stories,

"ஆபாச" யூடியூபருக்கு ஆப்பு..! களத்தில் இறங்கும் காவல்துறை


Advertisement