செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

"மே 6ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்" -தமிழக அரசு அறிவிப்பு

May 04, 2021 01:59:34 PM

50 சதவீதப் பணியாளர்களைக் கொண்டு அலுவலகங்கள் இயங்க வேண்டும் எனவும் காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, 6ந் தேதி காலை முதல் 20ந் தேதி காலை 4மணி வரை புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள், பேருந்துகள், வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து செல்ல பயணிகளுக்கு அனுமதிக்கப்படுகிறது.

வணிக வளாகங்கள் இயங்குவதற்கான தடை தொடர்ந்து நீடிக்கும். அதே நேரத்தில் வணிக வளாகங்களில் மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனியாக செயல்படுகின்ற மளிகை மற்றும் காய்கறி விற்பனை செய்யும் குளிர்சாதன வசதியின்றி மதியம் 12 மணி வரை இயங்கலாம்..

மளிகை மற்றும் பலசரக்குக் கடைகள் தவிர இதரக் கடைகள் அனைத்தும் திறக்கத் தடை விதிக்கப்படுகிறது.

மருந்தகம், பால்விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் மட்டும் வழக்கம்போல் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேநீர்க் கடைகள் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் அமர்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதி அறைகளில் உணவு வழங்கலாம்- உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.

உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள் 20ந் தேதி வரை செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளிலும் அழகு நிலையங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இறப்பு நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு.

மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம். வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சிக் கடைகள் திறக்க தடை நீடிக்கும்.

தொழிற்சலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இரவு நேரங்களில் செயல்படலாம் என்றும், அந்நிறுவனங்களின் அனுமதிக் கடிதங்களுடன் இரவு நேரத்தில் பயணிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.


Advertisement
"உயிரைப் பறித்த கந்துவட்டி" தெருவில் நிற்கும் குடும்பம்
பாபா அத்துமீறலுக்கு "ஆமாம் சாமி" ஆசிரியைகள் மீது போக்சோ பாய்ந்த பின்னணி
வெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..!
130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி சிங்கம்..! சாமர்த்தியம் காப்பாற்றியது
காதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..! ரூ 700 கோடி சொத்து இருக்குதாம்..!
அண்ணாசாலையில் சைக்கிளில் வீலிங், அடங்கவே மாட்றானுங்க..! சர்க்கஸ் சாகச புள்ளீங்கோஸ்
திறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..! போலீசுக்கு புது தலைவலி
வங்கி ஊழியர் டூ கொலைகாரன்.. கல்லூரி காதலிக்காக கொலை..! மனைவியை கொன்று நாடகம்
மாஃபிங் போட்டோவால் பாய்பிரண்ட் பிளாக் மெயில்.. உயிரை மாய்த்த மாணவி..! பணம் பறிக்கும் கும்பல் அட்டூழியம்
ஆபாச யூடியூபர் தலைமறைவு.. சேனலை முடக்க நடவடிக்கை..!

Advertisement
Posted Jun 15, 2021 in தமிழ்நாடு,Big Stories,

"உயிரைப் பறித்த கந்துவட்டி" தெருவில் நிற்கும் குடும்பம்

Posted Jun 15, 2021 in தமிழ்நாடு,Big Stories,

பாபா அத்துமீறலுக்கு "ஆமாம் சாமி" ஆசிரியைகள் மீது போக்சோ பாய்ந்த பின்னணி

Posted Jun 15, 2021 in வீடியோ,செய்திகள்,Big Stories,

வெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ..!

Posted Jun 15, 2021 in இந்தியா,வீடியோ,Big Stories,

130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி சிங்கம்..! சாமர்த்தியம் காப்பாற்றியது

Posted Jun 15, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

காதல் டூயட் பாடி ஆசிரமத்தில் பஜனை சிவசங்கரின் லீலைகள்..! ரூ 700 கோடி சொத்து இருக்குதாம்..!


Advertisement