செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆவடி : பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்த போதகர் கைது!

Apr 20, 2021 04:44:57 PM

ஆவடி அருகே சர்ச்சுக்குள் வைத்து பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஸ்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆவடியை அடுத்த மோரை, நியூ காலனியைச் சேர்ந்த ஸ்காட் டேவிட் என்பவர் கிறிஸ்தவ மத போதகராக இருந்து வருகிறார். திருமலை நகரில் சர்ச் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு  ஆரிக்கம்பேடு, சாலோம்  நகரைச் சார்ந்த 48 வயது பெண்ணுக்கும் ஸ்காட் டேவிட்டுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த பெண் தனது குடும்ப கஷ்டங்களை டேவிட்டிடம் கூறி வேதனை பட்டுள்ளார். இதனையடுத்து, குடும்ப கஷ்டம் தீர பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று ஜெபம் செய்து வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் எங்களது சர்ச்சுக்கு வந்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் கஷ்டம் தீரும் என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, கடந்த 17- ந்தேதி அந்த பெண் திருமலை நகரில் உள்ள சர்ச்சுக்கு தனியாக சென்று உள்ளார். அங்கு முட்டியிட்டு அந்த பெண் மனமுறுகி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த ஸ்காட் டேவிட், அந்த பெண்ணை பின்னால் வந்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார். சர்ச்சிலிருந்து கத்தியவாறே வெளியே ஓடியுள்ளார். பின்னர், இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் மத போதகர் ஸ்காட் டேவிட்டை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.நீதிபதியின் உத்தரவின் பேரில் ஸ்காட் டேவிட்டை  திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.


Advertisement
தமிழ்நாட்டின் புதிய ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியின் போது சுவர் சரிந்து விழுந்து விபத்து ; 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் புதிதாக 1,693 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆட்டத்தில் கவிழ்த்து லட்சங்களை பறித்த அரசியல் தம்பதி கைது..!
திருட்டுத்தனமாக தண்ணீர் எடுத்தவர்கள் குறித்து தகவல் அளித்த அதிமுக நிர்வாகி மீது மாட்டு சாணத்தை வீசியெறிந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்
அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்சவரம்பு 2 ஆண்டு உயர்வு
டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை
ரூ.20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட ஆண் குழந்தை ; குழந்தையை வாங்கிய முதியவரிடம் அதிகாரிகள் விசாரணை
பள்ளி மாணவிகள் 23 பேருக்கு பாலியல் தொல்லை ; கணித ஆசிரியர் கைது
அரசு மருத்துவமனையில், இதய அறுவை சிகிச்சை செய்து பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்

Advertisement
Posted Sep 16, 2021 in சினிமா,Big Stories,

நாய் சேகர் யாரு ? வடிவேலு vs சதீஷ்..!பற்ற வைத்த ரஜினி முருகன்..!

Posted Sep 16, 2021 in தமிழ்நாடு,Big Stories,

ஆட்டத்தில் கவிழ்த்து லட்சங்களை பறித்த அரசியல் தம்பதி கைது..!

Posted Sep 16, 2021 in இந்தியா,செய்திகள்,Big Stories,

சென்ட்ரல் விஸ்டா திட்டம்...எதிர்க்கட்சிகளுக்கு மோடி கண்டனம்

Posted Sep 16, 2021 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு.... மொத்தம் 28 இடங்களில் சோதனை

Posted Sep 16, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கார் திருடனை விரட்டிப் பிடித்த காவல் சிங்கம்..!


Advertisement