செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
Big Stories

மகளிர் தினம்: அன்னையாய், சகோதரியாய், மனைவியாய் இருக்கும் பெண்மையைப் போற்றுவோம்!

Mar 08, 2021 10:52:12 AM

பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் வாக்கிற்கு இணங்க, ஆண்களுக்கு சரிநிகர் சமமாய் நிற்கும் பெண்களுக்கான தினம் இன்று. அந்தத் தினத்தின் பெருமைகளைப் பார்ப்போம்.

மகளிர் தினம் உலகம் முழுவதும் இன்று விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. சர்வதேச பெண்கள் தினம் என்று ஏதோ ஒப்புக்காக அறிவித்துவிடவில்லை ஐக்கிய நாடுகள் சபை. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று முக்கொள்கையை வலியுறுத்தி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக சமஉரிமை கேட்டு அந்நாட்டு பெண்கள் 1789ம் ஆண்டு முதன் முதலில் போராட்டத்தில் இறங்கினர்.

 ஆண்களுக்கு நிகரான உரிமைகள், வேலைக்கேற்ற ஊதியம், பெண்களுக்கும் வாக்குரிமை என்று அடிப்படை உரிமைகளைக் கேட்டு பாரீஸ் நகர வீதிகளில் போராட்டக் குரல்கள் ஒலித்தன. இந்தப் புரட்சி நெருப்பு உலகமெங்கும் பற்றிப் பரவ மார்ச் 8ம் நாள் சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. மற்ற நாடுகளில் சுதந்திரம் கேட்டு பெண்கள் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பேரரசி ரஷியா சுல்தானா என்பவர் இந்திய தேசத்தை ஆட்சி செய்திருந்தார். ஆனால் பின்வந்த காலங்களில் பெண்களின் உரிமையும், சமூக நீதியும் மறுக்கப்பட்டே வந்தன.

 சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதல், சொத்து மறுப்பு, உரிமை மீறல் என பெண்களுக்கான அடக்குமுறை மேலோங்கி, பின் அடங்கி விட, காமத்தைக் களிக்கும் போகப்பொருளாக மட்டும் பெண்களைப் பார்க்கும் நிலைமை இன்னும் மாறவில்லை.

 பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்ற கவிஞர்கள் பெண்ணுரிமை, பெண் கல்வி போன்றவற்றிற்கு ஆதரவாக நின்றனர்.

 அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு எனக் கேட்டவர்கள் வாய்பிளந்து நிற்குமளவிற்கு இன்று பெண்களின் முன்னேற்றம் சிகரம் தொட்டு நிற்கிறது. இன்று ஆண்கள் இருக்கும் அத்தனை துறைகளிலும் சரிநிகர் சமானமாய் வளர்ந்து வந்துள்ளனர் பெண்கள். போட்டிகள் நிறைந்த உலகில் மகளிரின் இன்றைய வளர்ச்சி பிரமிக்கத் தக்கதாய் அமைந்துள்ளது...

இந்த வளர்ச்சிக்கு அவர்கள் கொடுத்த விலையைச் சொல்லி மாளாது. ஆனாலும் அன்னையாய், சகோதரியாய், அருமை மனைவியாய், மகளாய் வெவ்வேறு அவதாரங்கள் எடுக்கும் பெண்மையைப் போற்றுவோம்....


Advertisement
தற்கொலை நாடகமாடிய மனைவி அச்சத்தில் போலீஸ் ஏட்டு தற்கொலை குடும்பத்தைக் கெடுத்த "குடி"
மென்பொறியாளருக்கு கொரோனா; 18வது மாடியில் இருந்து குதித்த மனைவி பலி...! குடும்பம் சிதைந்த கொடுமை
மீனவ வீரர்களின் வரலாற்றை மறைத்தாரா.. அட்டகத்தி ரஞ்சித்? சுழலும் சார்பட்டா சர்ச்சை..!
11 நிமிடத்திற்குள் சைக்கிளை பிரித்து மாட்டும் பொடியன்...! நான்கரை வயது சாதனை
போங்கு... போங்கு... போங்கு; சூதாட்டத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்..! மறுபடியும் சூதே வெல்லும்
சந்தோசமா இருப்பாராம்.. தாலி கட்ட மாட்டாராம்; மாப்பிள்ளைக்கு டும்.. டும்..!
கூட்டுப் பாலியல் வன்கொடுமை தற்கொலைக்கு முயன்ற சிறுமி
ஏங்க வந்துடுங்க… வந்துடுங்க.. கதவை தட்டி கண்ணீருடன் கலங்கிய மனைவி…
டிரோன் எதிர்ப்பு உபகரணம்- இனி எல்லையில் சோதனை நடக்கும்..!
சடலத்துடன் பைக்கில் நகர் வலம் சென்ற கொடூர கொலையாளிகள்..! திருப்பூரில் திகில் சம்பவம்

Advertisement
Posted Jul 25, 2021 in தமிழ்நாடு,Big Stories,

தற்கொலை நாடகமாடிய மனைவி அச்சத்தில் போலீஸ் ஏட்டு தற்கொலை குடும்பத்தைக் கெடுத்த "குடி"

Posted Jul 25, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மென்பொறியாளருக்கு கொரோனா; 18வது மாடியில் இருந்து குதித்த மனைவி பலி...! குடும்பம் சிதைந்த கொடுமை

Posted Jul 25, 2021 in சினிமா,வீடியோ,Big Stories,

மீனவ வீரர்களின் வரலாற்றை மறைத்தாரா.. அட்டகத்தி ரஞ்சித்? சுழலும் சார்பட்டா சர்ச்சை..!

Posted Jul 25, 2021 in வீடியோ,சென்னை,Big Stories,

11 நிமிடத்திற்குள் சைக்கிளை பிரித்து மாட்டும் பொடியன்...! நான்கரை வயது சாதனை

Posted Jul 25, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

போங்கு... போங்கு... போங்கு; சூதாட்டத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்..! மறுபடியும் சூதே வெல்லும்


Advertisement