செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பெண் ஊழியருடன் தனிமையில் இருந்த பாதிரியார்... நேரில் பார்த்த பெண் மருத்துவமனையில் அனுமதி!

Jan 30, 2021 12:27:50 PM

நெல்லை மாவட்டத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் பெண் ஊழியருடன் தனிமையில் இருந்ததைப் பார்த்துவிட்ட சமையல்கார பெண்ணை கொலை வெறியுடன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள ரோஸ்மியபுரம் எனும் ஊரில் ஹெர் மைன்ஸ் (( Hermines Home for the Destitute )) எனும் பெயரில் இளையோர் மற்றும் முதியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 30 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறியவர்கள் மற்றும் முதியோர்கள் தங்கியுள்ளனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப் ஈஸிதோர் ((Joseph Isidore )) என்ற பாதிரியார் நிர்வாகம் செய்து வருகிறார். திசையன்விளை அருகிலுள்ள முதுமொத்தான்மொழி கோவில் தெருவைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவர் பல வருடங்களாகக் காப்பகத்தில் சமையல் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், காப்பகத்தின் நிர்வாகி ஜோசப்புக்கும் அங்கு பணிபுரியும் ஜெயலெட்சுமி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துவந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 25 - ம் தேதி காப்பகத்தில் உள்ள தனியறை ஒன்றில் ஜோசப்பும் ஜெயலட்சுமியும் தனிமையில் இருந்ததாகவும் அதை எதிர்பாராத விதமாக ராஜம்மாள் பார்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, ஜோசப் ஈஸி தோர் மற்றும் ஜெய லட்சுமி ஆகியோர் சேர்ந்து ராஜம்மாளைத் தாக்கியதையடுத்து, ராஜம்மாள் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவல் அறிந்த ராதாபுரம் எஸ்.ஐ. சிவ பெருமாள் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த ராஜம்மாளிடம் விசாரணை நடத்தினார். ஜெயலட்சுமியுடன் ஜோசப் இருந்ததை தனிமையில் இருந்ததைப் பார்த்ததால் அவர்கள் தாக்கியதாகவும், தன் வறுமை மற்றும் ஆதரவின்மை காரணமாக இத்தனை நாட்களாக அதை சகித்துக்கொண்டு இருந்ததாகவும் ராஜம்மாள் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்

ராஜம்மாள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ரோஸ்மியபுரம் இளையோர் மற்றும் முதியோர் காப்பாகத்தின் நிர்வாகத்தினை கவனித்து வரும் பாதிரியார் ஜோசப் ஈஸி தோர் மற்றும் ஜெய லட்சுமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பணகுடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement
மலைப்பாதை வளைவில் அதிவேகத்தில் பயணம்... நிலை தடுமாறி எதிரே வந்த லாரி ஏறி இறங்கியதில் கல்லூரி மாணவர்கள் பலி...!
பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டின் முன்பு, கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி மருமகள் தர்ணா...!
கோடை மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்பு... அதிகாரிகளை அனுப்பி கள ஆய்வு செய்ய இ.பி.எஸ். வலியுறுத்தல்..!
தந்தையை கொலை செய்த பெண் ஒரு வருடத்திற்கு பின்அடித்துக் கொலை..!
2 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.. 4 பேர் உயிரிழப்பு..!
வருமான வரித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம்.. திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது..!
மறைமலைநகர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் பைக் திருட்டு.. குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரம்..!
குழந்தையின் சடலத்துடன் 10 கி.மீ தூரம் நடை பயணம்.. மலைக்கிராமங்களின் கண்ணீர் பக்கங்கள்..!
வரதராஜ பெருமாள் கோவிலில் திருடப்பட்ட 7 சுவாமி சிலைகள் பறிமுதல்.. திருடிய சாமியார் கைது..!
ரூல்ஸ் தெரியுமா.. ரூல்ஸ்..? போய் முதல்ல தெரிஞ்சிட்டு வாங்க.. போலீசுடன் மல்லுக்கு நின்ற பெண்.!

Advertisement
Posted May 29, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குழந்தையின் சடலத்துடன் 10 கி.மீ தூரம் நடை பயணம்.. மலைக்கிராமங்களின் கண்ணீர் பக்கங்கள்..!

Posted May 28, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

தமிழில் ஒலித்த மந்திரங்கள்..! ஆசி வழங்கிய ஆதீனங்கள்.!! நிறுவப்பட்டது செங்கோல்.!!!

Posted May 29, 2023 in சற்றுமுன்,வீடியோ,Big Stories,

வாடகை ஸ்கூட்டரில் வலம் வந்த மன்மதராசா.. பெண்களை சீண்டியதால் மாவுக்கட்டு..!

Posted May 29, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ரூல்ஸ் தெரியுமா.. ரூல்ஸ்..? போய் முதல்ல தெரிஞ்சிட்டு வாங்க.. போலீசுடன் மல்லுக்கு நின்ற பெண்.!

Posted May 28, 2023 in இந்தியா,Big Stories,

அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி...!


Advertisement