செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பெண் ஊழியருடன் தனிமையில் இருந்த பாதிரியார்... நேரில் பார்த்த பெண் மருத்துவமனையில் அனுமதி!

Jan 30, 2021 12:27:50 PM

நெல்லை மாவட்டத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் பெண் ஊழியருடன் தனிமையில் இருந்ததைப் பார்த்துவிட்ட சமையல்கார பெண்ணை கொலை வெறியுடன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள ரோஸ்மியபுரம் எனும் ஊரில் ஹெர் மைன்ஸ் (( Hermines Home for the Destitute )) எனும் பெயரில் இளையோர் மற்றும் முதியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 30 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறியவர்கள் மற்றும் முதியோர்கள் தங்கியுள்ளனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப் ஈஸிதோர் ((Joseph Isidore )) என்ற பாதிரியார் நிர்வாகம் செய்து வருகிறார். திசையன்விளை அருகிலுள்ள முதுமொத்தான்மொழி கோவில் தெருவைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவர் பல வருடங்களாகக் காப்பகத்தில் சமையல் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், காப்பகத்தின் நிர்வாகி ஜோசப்புக்கும் அங்கு பணிபுரியும் ஜெயலெட்சுமி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துவந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 25 - ம் தேதி காப்பகத்தில் உள்ள தனியறை ஒன்றில் ஜோசப்பும் ஜெயலட்சுமியும் தனிமையில் இருந்ததாகவும் அதை எதிர்பாராத விதமாக ராஜம்மாள் பார்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, ஜோசப் ஈஸி தோர் மற்றும் ஜெய லட்சுமி ஆகியோர் சேர்ந்து ராஜம்மாளைத் தாக்கியதையடுத்து, ராஜம்மாள் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவல் அறிந்த ராதாபுரம் எஸ்.ஐ. சிவ பெருமாள் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த ராஜம்மாளிடம் விசாரணை நடத்தினார். ஜெயலட்சுமியுடன் ஜோசப் இருந்ததை தனிமையில் இருந்ததைப் பார்த்ததால் அவர்கள் தாக்கியதாகவும், தன் வறுமை மற்றும் ஆதரவின்மை காரணமாக இத்தனை நாட்களாக அதை சகித்துக்கொண்டு இருந்ததாகவும் ராஜம்மாள் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்

ராஜம்மாள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ரோஸ்மியபுரம் இளையோர் மற்றும் முதியோர் காப்பாகத்தின் நிர்வாகத்தினை கவனித்து வரும் பாதிரியார் ஜோசப் ஈஸி தோர் மற்றும் ஜெய லட்சுமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பணகுடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement
வீடியோ கால் தூண்டிலில் சிக்கியதால் உயிரை மாய்த்த மீனா..! உதவி உபத்திரமானதாக கண்ணீர்..!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. பிப்ரவரி 19 வாக்குப்பதிவு.. பிப்ரவரி 22 வாக்கு எண்ணிக்கை..!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுக்க ஊர்வலம்
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு
13 புதிய பேருந்து நிலையங்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு
துப்பாக்கி குண்டு பாய்ந்து மேற்கூரை சேதமடைந்த வீட்டில் இருந்து மேலும் ஒரு துப்பாக்கி குண்டு கண்டெடுப்பு
தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களில் குடியரசு தினம் கொண்டாட்டம்
குடிபோதையில் ஆயுதங்களுடன் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்த கும்பல் கைது
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் ; சென்னை வானிலை ஆய்வு மையம்

Advertisement
Posted Jan 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

வீடியோ கால் தூண்டிலில் சிக்கியதால் உயிரை மாய்த்த மீனா..! உதவி உபத்திரமானதாக கண்ணீர்..!

Posted Jan 26, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணாமூச்சி ஆடிய படப்பை குணா பக்காவாக சரண்..! போலீசாரிடம் சிக்காமல் கோர்ட்டுக்கு வந்தது எப்படி ?

Posted Jan 26, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

விருந்துக்கு அழைத்து வீடியோ எடுத்த வில்லங்கச் செல்வி...! லேடிக்காக கோடியை இழந்த ஜொள்ளர்கள்..!

Posted Jan 25, 2022 in இந்தியா,Big Stories,

குடியரசு தினவிழா.. விழாக்கோலத்தில் டெல்லி.!

Posted Jan 25, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

டவுனுக்குள் சந்தனமர வேட்டை.. ஜூனியர் வீரப்பன் யார் ? குழப்பத்தில் போலீஸ்


Advertisement