செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சுற்றுச்சூழல்

சிறுத்தையை வேட்டையாடி, சமைத்துத் தின்ற கொடூரர்கள் - கேரளாவில் அட்டூழியம்!

Jan 24, 2021 08:41:12 AM

கேரள மாநிலத்தில் சிறுத்தைக்கு சுருக்கு போட்டு வேட்டையாடி, சமைத்து உண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தையை வேட்டையாடிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி, மாங்குளம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சிலர் சிறுத்தையை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், வனத்துறையினர் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில், சூரியகோஸ், பினு, குஞ்சப்பன், வின்சென்ட், வினோத் ஆகிய ஐந்து பேரும் சிறுத்தையை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் ஐந்து பேரும் கடந்த புதன்கிழமையன்று முனிபாரா என்ற காட்டில் சிறுத்தைக்கு சுருக்கு பொறி வைத்துள்ளனர். சுருக்கில் சிக்கிய சிறுத்தை பல மணி நேரம் போராடி இறந்துள்ளது. அதற்குப் பிறகு, அந்த சிறுத்தையை வினோத்தின் வீட்டுக்கு யாருக்கும் தெரியாமல் தூக்கிச் சென்று சமைத்து உண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கேரளா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடமிருந்த சிறுத்தையின் தோல், பற்கள் மற்றும் நகங்கள் ஆகியவற்றை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சிறுத்தை வேட்டையாடியது குறித்து வனத்துறை அதிகாரி உதய் சூரியன் என்பவர், “ இந்த சிறுத்தை வேட்டைக்கு வினோத் என்பவர் தான் தலைமை தாங்கியுள்ளார். அவர்கள் வலையில் சிக்கிய ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தையைக் கொன்று தின்றுள்ளனர். சிறுத்தையின் தோலை விற்பதற்காக பதப்படுத்தி வைத்துள்ளனர். கேரளாவில் அவ்வப்போது பன்றி, மான் வேட்டையில் சிலர் சிக்கினாலும் சிறுத்தையை சமைத்து உண்டிருப்பது இதுவே முதல்முறை. இது வேதனையளிப்பதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தகவல் கிடைத்த நான்கு மணி நேரத்தில் வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு, சிறுத்தையை வேட்டையாடித் தின்றவர்களைக் கைது செய்துள்ளனர். ஐந்து பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது..!  


Advertisement
பிரபஞ்சத்தில் காஸ்மிக் கதிர்களால் நடனமாடும் கருந்துளைகள்.!
நீர்மின் திட்டங்களால் பாதிக்கும் மேற்பட்ட ஜாகுவார்கள் அழிந்துள்ளதாக தகவல்
காவிரியில் 65 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து நீடிப்பு.. அருவிகளிலும் ஆற்றிலும் குளிக்கத் தடை..!
உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் 14 சதவீத பவளப்பாறைகள் அழிவு...!
தமிழகம் முழுவதும் 16,250 ஹெக்டேர் அளவிற்கு வனம் ஆக்கிரமிப்பில் உள்ளது - தமிழக அரசு
சுமார் 17 மாதங்கள் பயணம் செய்து வேறொரு வாழ்விடத்தை அடைந்த யானைக் கூட்டம்
தமிழ்நாட்டில் பரவலாக மழைப்பதிவு.! கன முதல் மிக கனமழைக்கும் வாய்ப்பு.!
கொடைக்கானலில் நடு வீதியில் நடந்த சம்பவம்... திருந்துவார்களா மக்கள்?
ஊரடங்கில் தவிப்போருக்கு உதவும் வகையில் ஓர் உன்னத முயற்சி... எழுச்சியின் நன்னயம்!
சர்வதேச பூமி தினத்தையொட்டி சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள் !

Advertisement
Posted Aug 18, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு...! மாடலுடன் டுகாட்டி காதலன் டூயட்டு..! ஆட்டம் போட்டவனுக்கு போலீஸ் ஆப்பு

Posted Aug 18, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெட்டி இங்கே.. தங்கம் எங்கே..? ஊர் குருவி கள்ள பருந்தானது..! கண்ணாமூச்சி ரே.. கண்டுபிடி யாரே..!

Posted Aug 17, 2022 in சென்னை,Big Stories,

சென்னை நிதிநிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை.. கத்திமுனையில் கைவரிசை..!

Posted Aug 17, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கஞ்சா குடிக்கி இளசுகள் ஓட்டலில் அட்டகாசம்.. கொலை வெறி தாக்குதல்..! இதற்கு என்ன தான் தீர்வு..?

Posted Aug 16, 2022 in சென்னை,Big Stories,

15 நிமிடங்களில் 32 கிலோ நகைகளை திருடியது எப்படி? முக்கிய கொள்ளையன் பரபரப்பு தகவல்..!


Advertisement