தலைப்புச் செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சோனி , சாம்சங் பெயரில் போலி எல்.இ.டிக்கள்... திருச்சியை அதிர வைத்த எலக்ட்ரானிக் கடை!

Nov 19, 2020 04:25:53 PM

சோனி, சாம்சங் போன்ற முன்னனி நிறுவனங்களின் பெயரில் போலி எல்இடி டிவி-க்கள் விற்பனை செய்த எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி பீமா நகர் பகுதியில் உள்ள சிட்டிபிளாசா வணிகவளாகத்தில் 'திருச்சி எலக்ட்ரானிக்ஸ் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், தீபாவளி பண்டிகையையொட்டி முன்னனி நிறுவனங்களின் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கடையில் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த சவுகத் அலி என்பவர் சோனி நிறுவனத்தின் 32 இன்ச் எல்இடி வாங்கியுள்ளார். வீட்டில் டி.வி. யை பொருத்திய சவுகத் அலி அதை ஆன் செய்ய முயன்றார். ஆனால், டி.வி. ஆன் ஆகவில்லை.

இதையடுத்து, சவுக்கத் அலி டி.வி. வாங்கிய கடைக்கு சென்று அதன் உரிமையாளர் நிஜாமுதீனிடம் புகார் அளித்தார். ஆனால், உரிமையாளர் நிஜாமுதீன் புகாரை கண்டுகொள்ளவே இல்லை. இதனால், சந்தேகமடைந்த சவுகத் அலி, சோனி சர்வீஸ் சென்டருக்கு சென்று தான் வாங்கிய புதிய டி.வியை பரிசோதித்தார். அப்போது, அந்த டி.வி. போலி என்பது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த சவுகத் அலி, இது தொடர்பாக பாலக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குபதிவுசெய்த காவல் ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை நடத்தியதில், அங்கிருந்த அனைத்து எல்இடி டிவிக்களும் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடை உரிமையாளர் நிஜாமுதீன் போலியான பொருட்களையே வாடிக்கையாளர்களுக்கு இதுவரை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து , கடை உரிமையாளர் நிஜாமுதீன், விற்பனையாளர்கள் முகம்மது பைசல், சரவணன் ஆகியோர்மீது 8 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்த போலீஸார் அவர்களை கைதுசெய்தனர். கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த முன்னனி நிறுவனங்களின் போலி 153டிவிக்களை பறிமுதல் செய்ய்ப்பபட்டது.

தீபாவளி பண்டிகைக்காக முன்னனி நிறுவனங்களின் டிவி மற்றும் வீட்டுஉபயோகப்பொருட்கள் தள்ளுபடி விலையில் வாங்கிய பொதுமக்கள் மத்தியில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
சீர்காழி சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள், காவல் நிலையத்தில் வழுக்கி விழுந்ததில் 2 பேருக்கு மாவு கட்டு
வெடித்து சிதறிய ஃபிரிட்ஜ் ... மின்னல் வேகத்தில் செயல்பட்ட தீயணைப்புத்துறை!
திருமண நாளில் தவறவிட்ட 50 பவுன் நகை... குண்டுமணி குறையாமல் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களில் இலேசான மழை பெய்யக் கூடும்- வானிலை ஆய்வு மையம்
ஜெயலலிதா பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு
சீர்காழியில் கொடூர இரட்டைக் கொலை சம்பவம்: டம்மி துப்பாக்கிகளை பயன்படுத்திய கொள்ளையர்கள்..!
காதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம்! - திருமணத்துக்கு முன்னதாக காதலனை கொலை செய்த காதலி கைது!
திருடு போன சிறுவனின் சைக்கிள்... முதல்வர் முதல் கலெக்டர் வரை களமிறங்கிய ஆச்சரியம்!
சென்னை கோட்டையில் நாளை மாலை 4.30க்கு தமிழக அமைச்சரவை கூட்டம்
தைப்பூசத்தையொட்டி இன்று முதன்முறையாக அரசு விடுமுறை... ரேஷன் கடைகளும் இயங்காது என அறிவிப்பு

Advertisement
Posted Jan 28, 2021 in சென்னை,Big Stories,

கோயம்பேட்டில் பயங்கரம்: 4 பேருக்கு வளைத்து வளைத்து வெட்டு, கஞ்சா போதையில் ரவுடி அட்டூழியம்

Posted Jan 28, 2021 in தமிழ்நாடு,தலைப்புச் செய்திகள்,Big Stories,

சீர்காழியில் கொடூர இரட்டைக் கொலை சம்பவம்: டம்மி துப்பாக்கிகளை பயன்படுத்திய கொள்ளையர்கள்..!

Posted Jan 28, 2021 in இந்தியா,Big Stories,

'மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் 18 பெண்களை கொன்றேன்!' 'ஊமைவிழிகள் 'ரவிச்சந்திரன் போல வாக்குமூலம்

Posted Jan 28, 2021 in தமிழ்நாடு,Big Stories,

காதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம்! - திருமணத்துக்கு முன்னதாக காதலனை கொலை செய்த காதலி கைது!

Posted Jan 28, 2021 in இந்தியா,Big Stories,

போராட்டத்தில் இருந்து விவசாய சங்கங்கள் விலகல்


Advertisement