சென்னையில் காவல் ஆணையரின் 17 வயது மகள் குனிஷா அகர்வால், ஆன்லைன் வகுப்புகளுக்கான உபகரணங்கள் இன்றி தவிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு வெப்சைட் ஒன்றை உருவாக்கி அனைவரது பாரட்டையும் பெற்று வருகிறார்.
காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலின் மகள் குனிசா அகர்வால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து என்ஜிஓ ஒன்றின் உதவியுடன் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆன்லைன் வகுப்புக்கு தேவையான உபகரணங்களை சேகரித்து வருகிறார்.
www.helpchennai.org என்ற இணையதளத்தை உருவாக்கி, அதில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இந்த உபகரணங்களை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்து வருகிறார்.