தலைப்புச் செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பாலியல் மேனேஜருக்கு மிளகாய் பொடி ட்ரீட்மெண்ட்.. மதுரை பொண்ணுங்க அதிரடி..! போலீஸ் இப்படி செய்யலாமா ?

Sep 29, 2020 02:17:53 PM

ஈரோடு ஜே.ஜே கார்மெண்ட்ஸ் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம்  பாலியல் தொல்லை கொடுத்து வந்த மேனேஜரை, தனிமையில் அழைத்துச்சென்று பெப்பர் ஸ்பிரே அடித்து கட்டிப்போட்டு மிளகாய் பொடியை தூவி தூக்கிப்போட்டு மிதித்த மதுரை பெண்களின் வீடியோ வெளியாகி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் ஜே.ஜே மில்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகின்றது.

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனமான இங்கு அவினாசி அடுத்த சூளையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். வெளியூரை சேர்ந்த ஏராளமான பெண் ஊழியர்கள் இங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

சம்பவத்தன்று மேலாளர் சிவக்குமார், கார்மெண்ட்ஸின் கணினி ஊழியரான மதுரையை சேர்ந்த சங்கீதா மற்றும் அவரது தோழி ஆகியோருடன் பல்லடம் அடுத்த பச்சான்காட்டுப்பாளையம் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு வைத்து சங்கீதாவும் அவரது தோழியும் சேர்ந்து மேலாளர் சிவக்குமார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து அவர் நிலைகுலைந்த நேரத்தில் உதைத்து கைகால்களை கட்டிபோட்டு மிளகாய் பொடிதூவியதோடு காவல்துறை கட்டுப்பாட்டறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர், மிளகாய் பொடி ட்ரீட் மெண்டால் நிலைகுலைந்த மேனேஜர் சிவக்குமாரையும், தாக்குதல் நடத்திய இரு பெண்களையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில் சிவக்குமார் குறித்து திடுக்கிடும் சில்மிஷ குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார் சங்கீதா. கார்மென்ட்ஸில் வேலைப்பார்க்கும் தனக்கு பிடித்த பெண்களிடம் செல்போன் நம்பரை வாங்கிக் வைத்துக் கொள்ளும் மேலாளர் சிவக்குமார் , அவர்களை சேலை அணிந்து வரச்சொல்லி வாரந்தோறும் முறைவைத்து வெளியிடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது வழக்கம் என்றும், தனக்கு ஒத்துழைக்க மறுக்கும் பெண்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவார் என்பதால் சில பெண்கள் தங்கள் குடும்ப வறுமையை நினைத்து சிவக்குமாரின் மிரட்டலுக்கு அஞ்சி பாலியல் சீண்டல்களை வெளியில் சொல்ல இயலாமல் தவித்ததாக தெரிவித்துள்ளார்.

அதே போல தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததால், சிவக்குமார் இனி எந்த பெண்ணிடமும் தவறாக நடக்கக் கூடாது என்று எச்சரிக்கும் விதமாக அவர் தனிமையில் இருக்க அழைத்துச்சென்ற இடத்தில் வைத்து மிளகாய் பொடி தூவி கட்டிபோட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தின் போது எடுத்த வீடியோ ஒன்றையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

ஆனால் உதைவாங்கிய சிவக்குமாரோ, தான் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தன்னை கடத்தி வந்து தாக்கியதாக தனது வழக்கறிஞரை வைத்து போலீசாரிடம் பக்குவமாக பேசி உள்ளான்.

இதையடுத்து போலீசார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால், தங்களிடம் புகார் செய்யாமல் நீங்களே எப்படி நேரடியாக தாக்குதல் நடத்தலாம் என்று இரு பெண்களின் மீதும், சிவக்குமாரை அடித்து உதைத்ததாக வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் இரு பெண்களும் அளித்த புகாரின் பேரில் சிவக்குமார் மீதும் சாதாரண அடிதடி வழக்கு ஒன்றை பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து தாங்கள் நடு நிலையாக நடந்திருப்பதாக காட்டிக் கொண்டுள்ளனர்.

தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள சங்கீதா, மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, பல்லடம் காவல்துறையினர் பாலியல் தொல்லை கொடுத்த சிவகுமாருக்கு ஆதரவாக தங்களை மிரட்டி முதல் தகவல் அறிக்கையில் கையெழுத்து பெற்றதாக புகார் தெரிவித்துள்ளார்.

பெண்களின் உடலுக்கோ, உயிருக்கோ ஆபத்து ஏற்படுகின்ற நேரத்தில் சுயபாதுகாப்புக்காக எதிர்தாக்குதலில் ஈடுபட சட்டத்தில் இடம் உள்ள நிலையில், புகார் அளித்த பெண்களையே போலீசார் கைது செய்திருப்பது கண்டணத்துக்குறியது என்கிறார் ஆர்ச்சிட்ஷா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அறக்கட்டளை வழக்கறிஞர் ராஜலட்சுமி.

அதே நேரத்தில் ஜே.ஜே.கார்மெண்ட்ஸ் மேலாளர் சிவக்குமார் கூற்றுப்படி கடத்திச்சென்று தாக்குவதாக இருந்தால், அது சாத்தியமா ? தாங்கள் தாக்குவதை சம்பந்தப்பட்ட பெண்கள் வீடியோ எடுக்க வேண்டிய அவசியம் என்ன ? என்று கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் இந்த வழக்கை மறு விசாரணை நடத்தினால் இன்னும் பல உண்மைகள் வெளிவரலாம் என்கின்றனர்.

இதனிடையே பாலியல் தொல்லை கொடுத்த மேலாளரை தாக்கிய பெண்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு மறு விசாரணை நடத்தப்படும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் தெரிவித்துள்ளார்.


Advertisement
திருப்பதி கோவிலில் உரிய மரியாதை கிடைக்கவில்லை: கண்கலங்கிய நடிகை ரோஜா
அடையாறு புற்றுநோய் கழகத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா காலமானார்
கலாபக்காதலன் அடித்துக் கொலை..! காதலி மற்றொரு காதலனுடன் கைது
பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..!
கள்ள மது விற்கும் குடிமகன்களால் தாக்கப்பட்ட காவலர் - சிசிடிவி காட்சிகள்
இளையராஜாவை துரத்தும் இம்சையரசர்கள்..! உதவியா ? உபத்திரமா ?
வீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு
டிராபீஸ் யோகா செய்த நடிகை அமலா பால்!
மாணவர்களை வரவேற்க ஆயத்தமாகும் பள்ளிகள்!
சென்னையில் மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் அக்காவின் கணவர் கைது

Advertisement
Posted Jan 19, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கலாபக்காதலன் அடித்துக் கொலை..! காதலி மற்றொரு காதலனுடன் கைது

Posted Jan 19, 2021 in வீடியோ,Big Stories,

பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி..!

Posted Jan 19, 2021 in சினிமா,வீடியோ,Big Stories,

இளையராஜாவை துரத்தும் இம்சையரசர்கள்..! உதவியா ? உபத்திரமா ?

Posted Jan 18, 2021 in தமிழ்நாடு,Big Stories,

தொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு

Posted Jan 18, 2021 in தமிழ்நாடு,Big Stories,

வனவேங்கைகளின் பன்றிபிடி விளையாட்டு: ஜல்லிக்கட்டுக்கு போட்டியாக களம் கண்ட வீரர்கள்


Advertisement