Advertisement
Advertisement

Aadhaar எண்ணுடன் PAN எண்ணை இணைப்பதற்கான காலக் கெடுவை மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக் கெடுவை மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் இதனைத் தெரிவித்தார். போலி பான் கார்டுகளை ஒழித்து பினாமி சொத்துக்களை தடுக்கும் விதமாக ஆதார்-பான் எண்கள் இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. ஏற்கெனவே டிசம்பர் 31-ஆம் தேதி வரை அதற்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாப் அப் பிளாக்கர் நீக்கப்பட்ட கணினி அல்லது மொபைல்களில் income tax e filing இணையதளத்திற்குள் சென்று ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் பதிவிட்டால், ஒரு முறை பாஸ்வேர்ட் மூலம் எளிமையாக ஆதார்-பான் எண்களை இணைக்கலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன