Advertisement

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் அக்னி 5 ஏவுகணையின் சோதனை வெற்றி

அணு ஆயுதங்களை ஏந்தியபடி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்குதல் நடத்தும் அக்னி 5 ஏவுகணையின் இறுதி சோதனை இன்று நடத்தப்பட்டுள்து. ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவுகளிலிருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையால் சீனாவின் வடக்கு கடைசியில் உள்ள இலக்குகள் மீதும் தாக்குதல் நடத்த இயலும்.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணையின் இறுதி சோதனை நிறைவடைந்ததால் பாதுகாப்பு படைகளில் இணைக்கப்பட தகுதி பெற்றுள்ளது. அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளின் வரிசையில் அக்னி 5 சேர்க்கப்படுவதன் மூலம், 5 ஆயிரம் கிலோ மீட்டர் தாக்குதிறன் கொண்ட ஏவுகணைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன