Advertisement
Advertisement

50 ஆண்டுகளுக்குப் பின் வெடித்துச் சிதறவுள்ள எரிமலை

இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறக் கூடும் என்பதால் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஆகங் என்ற எரிமலை 51 ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீண்டும் நெருப்புக் குழம்புகளை வெளியேற்றத் தொடங்கியுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் எரிமலை வெடித்துச் சிதறக் கூடும் என்பதால் 10 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள், தங்களது வசிப்பிடங்களை விட்டு, வெளியேறி வருகின்றனர். தற்போது வரை 57 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். எரிமலை அதிர்வுகளை கணக்கிட்டு வருவதாகவும், எப்போது வெடித்துச் சிதறும் என்பதை யூகிக்க முடியாது என்றும் பேரழிவை மட்டுப்படுத்தும் முகமை தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன