Advertisement

47 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் பெற்ற தாயால் கைவிடப்பட்ட குழந்தை தற்போது ஸ்விஸ் MP

47 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவுடனேயே இந்தியாவில் பெற்ற தாயால் கைவிடப்பட்ட குழந்தை தற்போது ஸ்விஸ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். டெல்லியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவழி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஸ்விஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நிகோலஸ் சாமுவேல் கக்கர் (( Niklaus-Samuel Gugger )) தனது கதையை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 1970-ஆம் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள சி.எஸ்.ஐ. லம்பார்டு நினைவு மருத்துவமனையில் பிறந்த தன்னை வளர்க்க வசதியின்றி தனது தாய் அனுசுயா மருத்துவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டதாக அவர் தெரிவித்தார். தன்னை தத்தெடுத்த பெற்றோரான ஃபிரிஸ் – எலிசபெத் ((Fritz – Elizbeth)) உடன் தனது 4 வயது வரை கேரள மாநிலம் தலச்சேரியில் வசித்ததாகவும் பின்னர் ஸ்விட்சர்லாந்து வந்ததாகவும் தெரிவித்த நிகோலஸ், படிக்கவைக்க பெற்றோருக்கு வசதியில்லாததால் தோட்ட வேலை செய்ததாகவும் பின்னர் அரசியலில் நுழைந்து படிப்படியாக முன்னேறி நாடாளுமன்ற உறுப்பினராகியிருப்பதாகவும் தெரிவித்தார். தனது இந்திய தாய் அனுசுயா இறந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன