Advertisement

31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி40

இஸ்ரோவின் நூறாவது செயற்கைக்கோள் உள்ளிட்ட 31 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் மூலம் நேற்று
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டில், இஸ்ரோவின் 3 செயற்கைக்கோள்கள் மற்றும் கனடா, ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், தென்கொரியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் 28 செயற்கைக்கோள்களும் இருவேறு சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டன.

இதன்மூலம் இஸ்ரோவின் நூறாவது செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டு, இந்திய விண்வெளி வரலாற்றில் மேலும் ஒரு மைல் கல் எட்டப்பட்டது. இஸ்ரோவின் சாதனைக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன