Advertisement

3-வகுப்பு மாணவன் கொலையில் கைதான 11-ஆம் வகுப்பு மாணவன் கட்டாயத்தின் பேரிலே கொலையை ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளான்

டெல்லி குருகிராம் பள்ளியில் 3-வகுப்பு மாணவன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11-ஆம் வகுப்பு மாணவன் கட்டாயத்தின் பேரிலே கொலையை ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளான். இந்த வழக்கில் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழு பள்ளிப் பேருந்து நடத்துநர் ஒருவரை கைது செய்தது. பின்னர் இந்த வழக்கில் 11-ஆம் வகுப்பு மாணவனை சி.பி.ஐ கைது செய்தது.

விரைவில் வரவிருக்கும் தேர்வை ஒத்திவைக்கச் செய்யவே பிரத்யுமானை கொலை செய்ததாக 11-ஆம் வகுப்பு மாணவன் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கட்டாயத்தின் பேரிலேயே கொலையை ஒப்புக்கொண்டதாக அந்த மாணவன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன