2024-ல் ஒலிம்பிக்கை நடத்துவதற்கான ஏலத்தில் ஃபிரான்சு வெற்றி

2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்துவதன் மூலம் பிரான்சில் ஒருமைப்பாட்டு உணர்வு மேம்படும் என அந்நாட்டின் அதிபர் ((Macron)) இம்மானுவேல் மேக்ரன் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வகையில் அதற்காக ஏலத்தில் வெற்றி பெற பாடுபட்ட குழுவினருக்கு எலிசி மாளிகையில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு அவர் செய்திருந்தார். 1924 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பிரான்சு பெற்ற பீங்கான் ஜாடியை குழுவினருக்கு வழங்கி அவர் கெளரவித்தார்.

முன்னாள் அதிபர்கள் ((Nicolas Sarkozy)) நிகோலஸ் சர்கோசி, ஃப்ரான்காயிஸ் ஹாலண்டே, பிரான்சு ஒலிம்பிக் வீரர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் மேக்ரன், 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்தும்வரை தாம் நிச்சயம் பதவியில் நீடிக்க முடியும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *