Advertisement
Advertisement

2020ஆம் ஆண்டு இந்தியாவில் மின் வாகனங்களை இயக்க Toyota, Suzuki ஒப்பந்தம்

இந்தியாவில் 2020ஆம் ஆண்டு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த சுசுகி மோட்டார் நிறுவனமும், டொயோட்டா மோட்டார் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

இதன்படி வாகனங்களை தயாரிக்கும் பொறுப்பை சுசுகி நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க டெயோட்டா நிறுவனம் முன்வந்துள்ளது. முன்னதாக இதுதொடர்பான விரிவான ஆய்வை நடத்த இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், விற்பனைக்குப் பின் சேவை வழங்குவதற்கான பணியாளர் பயிற்சி மற்றும் நீடித்து உழைக்கும் வகையில் பேட்டரி பயன்பாடு குறித்து இந்த ஆய்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன