Advertisement

200க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான வரிக்குறைப்பு அமலுக்கு வந்தது – ஓட்டல்களுக்கு 5 சதவீத வரி நிர்ணயம்

200க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. கவுஹாத்தியில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பொருட்களை 18 சதவீத வரம்புக்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. எஞ்சிய 50 வகை பொருட்கள் மற்றும் சேவைகள் 28 சதவீத வரம்பில் நீடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு முதல் 180 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.

ஏசி மற்றும் ஏசி இல்லாத அனைத்து வகை உணவகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தினசரி பயன்படுத்தும் மின்சார ஸ்விட்சுகள், சவுண்ட் ரிகார்டர்கள், அதன் உதிரி பாகங்கள், மின்கருவிகள், உபகருவிகள், செல்போன்கள், இருவழி வாக்கி டாக்கிகள். திரவ சோப்பு, செல்போன்கள் போன்றவை மீது 12 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

மின்சார மோட்டார்கள், ஜெனரேட்டர்கள், யுபிஎஸ் கன்வர்ட்டர்கள், டிரான்பார்மர்கள், தொழில்துறையினருக்கான மின்னணு சாதனங்கள் ஆகியவற்றுக்கான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இசைக்கருவிகள், பைனாக்குலர், சுற்றுலா பைகள், கைப்பைகள், கண்ணாடி உறைகள், பெட்டிகள், சூட்கேசுகள் ஆகியவையும் 18 சதவீ வரிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

பாட்டரிகள் மற்றும் செல்கள் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன.சாக்லெட்டுகள், பிளாஸ்டிக் பைகள், சணல் பைகள், தீயணைப்புக் கருவிகள், போன்றவை 18 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதே போன்று தோல் பொருட்கள் மற்றும் ஆடை அணிகலன்கள் மீதான வரியும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

டிடர்ஜன்ட், சலவை திரவப் பொருட்கள் 21 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக்கப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன