108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, 4ஆவது ஆண்டாக, வழக்கறிஞர் பாட்ரிக் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.. அப்போது, அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின்படி, மருத்துவ சேவையில் உள்ளவர்களின் போராட்டங்களை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எனவே, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிப்பதாகவும், இந்த உத்தரவை மீறி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தனர். மேலும், மனுத் தொடர்பாக, பதிலளிக்கவும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன